Vivek Oberai in Selvaragavan direction

http://static.indianexpress.com/m-images/Tuesday%20%20,%20Mar%2023,%202010%20at%200821%20hrs/M_Id_142599_prince.jpg
டைரக்டர் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் கூறினார். டிப்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தயாரிக்க, விவேக் ஓபராய் நடிக்கும் தி பிரின்ஸ் இந்திப்படம் ஒரே நேரத்தில் தமிழிலும், தெலுங்கிலும் பிரின்ஸ் என்ற பெயரிலேயே வெளியாகிறது. இந்த படத்தின் விளம்பரத்திற்காக சென்னை வந்திருந்த விவேக் ஓபராய் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், பிரின்ஸ் படம் ஒரு 'க்ளோக்கல்' படம். அதாவது, தரத்தில் சர்வதேச அளவிலும் உணர்வில் இந்திய அளவிலும் இருக்கும் 'பைசா வசூல்' படம் இது. படத்தைப் பார்க்கும் அனைவருமே இதனை ஒரு ஆங்கிலப் படமாகவே உணர்வார்கள். படத்தின் தொழில் நுட்பக் கலைஞர்கள், இதற்கு முன் பெரும் சாதனை படைத்தவர்கள். ஆஸ்கர் சாதனையாளர் ரசூல் பூக்குட்டிதான் சவுண்ட் டிசைன் செய்துள்ளார். சண்டைக் காட்சிகளுக்காக மட்டும் ஒரு புதிய சத்தத்தைக் கண்டுபிடித்துள்ளார். அதற்கே ஒரு மாதம் ஆனது.

இந்தப் படத்தின் முக்கிய விஷயம், எனது ஒரிஜினல் உழைப்பு. எந்த ஒரு டூப் முயற்சியும் இல்லாமல் அனைத்து ரிஸ்க்கையும் நானே எடுத்தேன். இமய மலையில் ஹெலிகாப்டரில் 8000 அடி உயரத்தில் பனிச் சிகரங்களுக்கு மத்தியில் தொங்கினேன். ஒரு மாடியிலிருந்து அடுத்த மாடிக்கு பைக்கில் டைவ் அடித்தேன். ஆனால் இதற்காக 5 மாதங்கள் கடும் பயிற்சி எடுத்தேன். எதையும் நாமே ஈடுபாட்டுடன் செய்தால் சிறப்பாக வரும் என்பதால் இப்படி ரிஸ்க் எடுத்தேன். இந்தப் படத்தை நான் தமிழிலும் வெளியிடக் காரணம், சென்னை என்னுடைய தாய்பூமி. என் அம்மா பிறந்தது, வளர்ந்தது, நான் வளர்ந்தது எல்லாமே இந்த சென்னையில்தான். இந்த ஊரை நான் மிக மிக நேசிக்கிறேன். என் அம்மாவைப் போன்ற குணமுள்ள தமிழ்ப் பெண்ணையே நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். காரணம் என் மீது என் அம்மா வைத்திருக்கும் அன்பு மிகவும் அபாரமானது. ஒரு தமிழ்ப் பெண் எனக்கு மனைவியாக வந்தால் அதே அன்பு தொடரும் என்று நம்புகிறேன். காதல், திருமணம் போன்றவை கடைசி வரை நிலைக்க வேண்டும் என்று விரும்புபவன் நான். குறுகிய கால உறவுகளில் எனக்கு நம்பிக்கை இல்லை.

தமிழ் நடிகைகளில் எனக்கு மிகவும் பிடித்த நடிகை த்ரிஷா. ஏனென்றால் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறார். கச்சிதமாக இருக்கிறார். மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து இந்தி படத்தில் நான் நடித்திருக்கிறேன். அதில் எனக்கு ஜோடியாக கரீனா கபூர் நடித்த வேடத்தில், தமிழில் த்ரிஷா நடித்துள்ளார். அதைப் பார்த்து வியந்துபோனேன். த்ரிஷா இந்திக்கு வருகிறார் என்பது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் நடிக்க ஆசைப்படுகிறேன். அது விரைவில் சாத்தியமாகும். செல்வராகவன் இயக்கத்திலும் நடிக்க ஆசைப்படுகிறேன், என்றார்.

Comments

Most Recent