3 இடியட்ஸ் படத்தை விஜய் ரீமேக் செய்கிறார் என்பது உறுதியாகிவிட்டது. இந்தப் படத்தை வசூல்ராஜா, குட்டி போன்ற படங்களைத் தயாரித்த ஜெமினி பில...
3 இடியட்ஸ் படத்தை விஜய் ரீமேக் செய்கிறார் என்பது உறுதியாகிவிட்டது.
இந்தப் படத்தை வசூல்ராஜா, குட்டி போன்ற படங்களைத் தயாரித்த ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரிக்கிறது.
அமீர்கான் வேடத்தில் விஜய் நடிக்கிறார். மாதவன் நடித்த பாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பார் எனத் தெரிகிறது. மூன்றாவது நாயகனாக புதுமுகம் ஒருவரை நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது.
இந்தப் படத்தை விஷ்ணுவர்தன் இயக்குவார் என்று தெரிகிறது. படம் குறித்த விவாதம் நடந்து வருவதாகவும், இன்னும் சில தினங்களில் இறுதி அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
விஜய் இப்போது சுறா படத்தில் நடித்து வருகிறார். இதன் பிறகு மலையாள பாடிகார்டு படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார். சித்திக் இயக்குகிறார். அதந் பிறகு ஜெயம் ராஜா படத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் இப்போது 3 இடியட்ஸ் ரீமேக் வந்திருப்பதால் எந்தப் படத்தை முதலில் துவங்குவார் என்று தெரியவில்லை.
கமல் மகள் ஸ்ருதி இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கக் கூடும் என்கிறார்கள்.
விஜய்யின் கைவசம் உள்ள, சுறா உள்ளிட்ட 4 படங்களுமே ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது!
Comments
Post a Comment