Tamil actors are best in India

http://cinema.dinakaran.com/cinema/gallery/kw585.jpg

தமிழ் நடிகர்கள்தான் இந்தியாவிலேயே சிறந்தவர்கள் என்று கார்த்திக் கூறினார். பெதர் டச் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் ஹேமந்த் தயாரிக்கும் படம் ‘மாஞ்சா வேலு’. அருண் விஜய், தன்ஷிகா, கார்த்திக் நடித்துள்ளனர். ஏ.வெங்கடேஷ் இயக்கி உள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. விழாவில் நடிகர் கார்த்திக் பேசியதாவது:

இன்றைய இளைய தலைமுறை நடிகர்கள் அனைத்து வகையிலும் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறேன். தமிழ் சினிமா தரத்திலும், தொழில்நுட்பத்திலும் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவிலேயே தமிழ் நடிகர்கள்தான் சிறந்தவர்கள் என்ற கர்வம் எனக்கு உண்டு. அவர்களை உருவாக்குகிறவர்கள் இயக்குனர்கள். என்னதான் எனக்கு திறமை இருந்தாலும் அதைக் வெளிக்கொண்டு வந்தவர்கள் எனது இயக்குனர்கள்தான். அவர்கள் அனைவரும் எனக்கு குரு.
இவ்வாறு கார்த்திக் பேசினார்.

விழாவில் கவிஞர் வாலி பாடல்களை வெளியிட, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பெற்றுக் கொண்டார். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன், செயலாளர் சிவசக்தி பாண்டியன், இயக்குனர்கள் சுந்தர்.சி, ஷக்தி சிதம்பரம், அமுதன், நடிகர்கள் ஸ்ரீகாந்த், ஷாம், ஜெய், சிபி, உட்பட பலர் பேசினார்கள். முன்னதாக ஹேமந்த் வரவேற்றார். முடிவில் டாக்டர் மோகன் நன்றி கூறினார்.

Comments

Most Recent