Sonia Agarwal - Selvaraghavan divorced legally

http://thatstamil.oneindia.in/img/2010/03/12-sonia-agarwal200.jpg

இயக்குநர் செல்வராகவன் - சோனியா அகர்வாலுக்கு சட்டப்படி இன்று விவாகரத்து வழங்கப்பட்டது.

காதல் கொண்டேன் படத்தில் நாயகியாக நடித்த சோனியா அகர்வாலை காதலித்து, பல ஆண்டுகள் அதை சொல்லாமல் மறைத்து, 2006-ம் ஆண்டு மணந்தார் செல்வராகவன்.

ஆனால் சில மாதங்கள் மட்டுமே அவர்களின் திருமண வாழ்க்கை நீடித்தது. நடிகை ஆண்ட்ரியாவின் குறுக்கீடு மற்றும் சோனியா டிவியில் நடிக்க ஆரம்பித்தது என ஏக சண்டைக்குப் பிறகு இருவரும் பிரிய முடிவெடுத்து குடும்ப நல நீதிமன்றம் போனார்கள்.

இம்மனு மீதான விசாரணை பல்வேறு கட்டங்களாக நடந்து வந்தது. இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இருவருக்கும் சட்டப்படி விவாகரத்து வழங்கினார் நீதிபதி ராமலிங்கம்.

Comments

Most Recent