Shruthi Hassan - vetti bandhaa?

Shruthi`s show off
உலக நாயகன் கமல்ஹாசனின் வாரிசு ஸ்ருதிஹாசன்‌ வெட்டி பந்தா செய்வதாக கன்னட திரையுலகில் பரபரப்பு செய்தி கிளம்பியிருக்கிறது.
விசாரித்த உண்மை : உண்மைதான்! இந்தியில் நடித்த லக் படம் ஸ்ருதிஹாசனுக்கு லக்காக இல்லா விட்டாலும், கமல்ஹாசனின் உன்னைப்போல் ஒருவன் படத்தில் அவர் எடுத்த இசையமைப்பாளர் அவதாரமும், பாடகர் அவதாரமும் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்திருந்தது. இதையடுத்து இந்தியில் கவனம் செலுத்துவதற்காக மும்பையில் முகாமிட்டிருக்கும் அம்மணியை சமீபத்தில் கன்னட திரையுலகை சேர்ந்த பிரமுகர்கள் சிலர், கன்னடத்துல ஒரு படத்துக்கு பின்னணி பாடணும், பெங்களூருவுக்கு வர முடியுமா? என கேட்டுள்ளனர். ஆனால் அம்மணியோ, நான் மும்பையில இருக்கேன். பாட்டு வேணும்னா நீங்க இங்கே வாங்க என்று சொல்லி விட்டாரும். ஒருவழியாக யூனிட் மும்பை சென்றதும், நான் சொல்ற ஸ்டூடியோவில்தான் பாட்டை பதிவு பண்ணனும் என்று கண்டிஷன் போட்டிருக்கிறார். ஸ்ருதிதான் பாடணும்னு கன்னட ஹீரோ சொல்லிவிட்டதால் வேறு வழியின்றி அம்மணி சொன்ன ஸ்டூடியோவிலேயே பாட்டை பதிவு செய்துவிட்டு திரும்பியிருக்கிறது யூனிட். இதனால உலக நாயகனின் மகள் பண்ற அளப்பறைக்கு அளவே இல்லைனு கன்னடத்திரையுலகில் ‌பேசிக்கொள்கிறார்கள்.

Comments

Most Recent