விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் விளம்பரத்துக்காக திருச்சிக்கு தியேட்டர் விஸிட் வந்த சிம்புவை 'சுளுக்கெடுத்து விட்டார்களாம்' அவரது...
விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் விளம்பரத்துக்காக திருச்சிக்கு தியேட்டர் விஸிட் வந்த சிம்புவை 'சுளுக்கெடுத்து விட்டார்களாம்' அவரது ரசிகர்கள்... எல்லாம் ஒரு ஆர்வக் கோளாறுதான்.
இத்தனை நாள் சிம்புவை கொஞ்சம் விசித்திரமாக தள்ளி நின்று பார்த்தவர்கள், விண்ணைத் தாண்டி வருவாயா படத்துக்குப் பிறகு அவரை ரொம்பவே மொய்க்க ஆரம்பித்து விட்டார்களாம்.
சமீபத்தில் சேலத்தில் தனது படம் ஓடும் தியேட்டருக்கு படத்தின் தயாரிப்பாளர் கணேஷுடன் விஸிட் அடித்துள்ளார் சிம்பு.
சிம்புவைப் பார்த்ததும், ஆர்வத்தில் அவருக்கு கைகொடுக்க முண்டியடித்தார்களாம் ரசிகர்கள். ஆனால் அவர் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் கைகொடுத்துவிட்டு காரில் ஏற முயல, "அதெப்டி எங்களைக் கண்டுகொள்ளாமல் போகலாம்... காசு கொடுத்திருக்கோமாக்கும்..." என்று சவுண்ட் விட்டபடி, சிம்புவின் கையைப் பிடித்து ஒரு இழு இழுக்க மணிக்கட்டு கழன்று போகிற அளவு வலி பின்னியெடுத்து விட்டதாம். லேசான காயம் வேறு.
உடனே பக்கத்திலிருந்த கணேஷ் (வி.தா.வ. படத்தில் சிம்புவின் தோழனாக வருபவர்) உதவிக்குப் போக, அவரது கையையும் பிடித்து இழுத்தார்களாம். இதில் இருவருக்குமே கைகள் கடுமையாக சுளுக்கிக் கொள்ள, தப்பித்தோம் பிழைத்தோம் என காரில் ஏறிச் சென்றார்களாம்.
"கூட்டம் ரொம்ப ஓவராகிடுச்சி. என்னால எல்லாருக்கும் கைகொடுக்க முடியல. அவங்க ஆர்வத்துக்கு நம்மால ஈடு கொடுக்க முடியல. செம கூட்டம். எனக்கு கை சுளுக்கிடுச்சி. வலி ரொம்ப கடுமையா இருக்கு" என்ற சிம்பு, அடுத்து திருச்சிக்குப் போகவிருந்ததை கேன்சல் செய்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
Comments
Post a Comment