Rajini, Kamal in India Today's Top 50 Mighty persons

http://thatstamil.oneindia.in/img/2010/03/16-rajni-kanth200.jpg 

ஆண்டுதோறும் இந்தியா டுடே வெளியிடும் 'இந்தியாவின் 50 அதிகாரம் மிக்க மனிதர்கள்' பட்டியலில் ரஜினி இடம் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு அவருக்கு அளிகக்கப்பட்ட அதே 28வது இடம் இந்த ஆண்டும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் சன் குழும இயக்குனர் கலாநிதி மாறன், ஆஸ்கர்- கிராமி விருதுகள் வென்ற ஏ.ஆர். ரஹ்மான், அப்போல்லோ பிரதாப் ரெட்டி, ஜக்கி வாசுதேவ் ஆகியோர் தமிழகத்திலிருந்து இடம்பெற்றுள்ள இதர பிரபலங்கள்.

தமிழக அளவில் முதல் 10 முன்னணி பிரமுகர்கள் பட்டியலில் கமல்ஹாஸன், நக்கீரன் கோபால் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

ரஜினியை டாப் 50 பட்டியலில் தேர்வு செய்துள்ளதற்கு இந்தியா டுடே இப்படி விளக்கம் தெரிவித்துள்ளது:

"ஏனெனில், இந்தியாவிலேயே அதிக செலவில் எடுக்கப்பட்டு வரும் எந்திரன் படத்தில் நடித்து வருகிறார்.

கோலிவுட் பாராட்டு விழா, ஆர்ப்பாட்டங்களில் திரைப்பட நடிகர்கள் பங்கேற்க வற்புறுத்தப்படுவதற்கு எதிராக நடிகர் அஜீத் கொடுத்த எதிர்ப்புக் குரலுக்கு இவர் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். திரைப்படத் துறையினர் தெரிவித்த எதிர்ப்பு எடுபடவில்லை.

ஏனெனில், ஜாக்கி சானுக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கிய நடிகர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். சிவாஜிக்காக அவர் பெற்ற சம்பளம் ரூ 26 கோடி என்கிறார்கள்.."

Comments

Most Recent