‘கச்சேரி ஆரம்பம்’ படம் தெலுங்கில் வெளியிடப்படுகிறது. இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி கூறியதாவது: 3 வருட இடைவெளிக்கு ப...
‘கச்சேரி ஆரம்பம்’ படம் தெலுங்கில் வெளியிடப்படுகிறது. இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி கூறியதாவது: 3 வருட இடைவெளிக்கு பிறகு தமிழில் ‘கச்சேரி ஆரம்பம்’ படத்தை சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. ஜீவா நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரான படம். எல்லா அம்சங்களும் கலந்த கமர்ஷியல் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. 220 பிரின்ட்டுகள் போடப்பட்டுள்ளது. இதுவரை குடும்ப பட ரசிகர்களுக்காக சென்டிமென்ட் படங்களைத்தான் தயாரித்து வந்தோம். இப்போது அந்த டிரண்ட் மாறிவிட்டதால் நாங்களும் மாறிவிட்டோம். இதே படத்தை தெலுங்கிலும் வெளியிட இருக்கிறோம். அதில் வடிவேலு காமெடிக்கு பதில் பிரமானந்தம் காமெடியை இணைக்க இருக்கிறோம். இதற்காக ஐதராபாத்தில் 15 நாட்கள் ஷூட்டிங் நடத்த உள்ளோம். இவ்வாறு சவுத்ரி கூறினார்.
Comments
Post a Comment