Infosys Sudha Moorthy to play character role in Kannada movie

http://thatstamil.oneindia.in/img/2010/03/12-sudha-murthy200.jpg

இன்போஸிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவியும் சமூக ஆர்வலருமான சுதா மூர்த்தி திரைப்படம் ஒன்றில் நடிக்கிறார்.

அந்தப் படத்தின் பெயர் பிரார்த்தனே. கன்னடத்தில் தயாராகும் இந்தப் படத்தை சதாசிவ் ஷெனாய் என்பவர் இயக்குகிறார். ஹரீஷ் தயாரிக்கிறார்.

சுதா மூர்த்தி தொடர்பான காட்சிகள் இந்த மாதத்தில் படமாக்கப்பட இருக்கிறது. படத்தில், நடிகர்கள் ஆனந்த் நாக், பவித்ரா லோகேஷ், பிரகாஷ் ராய் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இது குறித்து சுதா மூர்த்தி கூறுகையில், "இது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. எனது வயதுக்கு மேக்-அப் போடுவது அவ்வளவு அழகாக இருக்காது. எனவே மேக்கப் தேவைப்படாத வகையில் அந்த கேரக்டரை உருவாக்குமாறு கேட்டுக் கொண்டேன்.

இந்த வயதில் சினிமாவா என்ற கேள்வி எழலாம். தன்னை ஒரு முறை திரையில் பார்க்க யாருக்குத்தான் பிடிக்காது? அப்படி ஒரு ஆசை இது என்று வைத்துக் கொள்ளுங்களேன்" என்றார்.

சுதா மூர்த்தி பல கட்டுரைகள், தொடர்கள் எழுதியுள்ளார். டெலிவிஷன் தொடரிலும் நடித்துள்ளார்.

Comments

Most Recent