திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் என்.சுபாஷ் சந்திர போஸ் தயாரிக்கும் படம் ‘பையா’. லிங்குசாமி இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத...
திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் என்.சுபாஷ் சந்திர போஸ் தயாரிக்கும் படம் ‘பையா’. லிங்குசாமி இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். கார்த்தி, தமன்னா ஜோடியாக நடித்துள்ளனர். பட குழுவினர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தமன்னா கூறியதாவது: லிங்குசாமியின் இயக்கத்தில் நடித்தது திருப்தியாக இருந்தது. இதில் நீண்ட வசனங்கள் பேசி இருக்கிறேன். ஏற்கெனவே ‘அயன்’ படத்தில் சூர்யாவுடன் நடித்திருந்தேன். இப்படத்தில் அவரது தம்பி கார்த்தியுடன் நடித்திருக்கிறேன். சூர்யாவின் ரசிகை நான். ஒரு கேரக்டரில் மூழ்கிவிட்டால் அதே எண்ணத்தில்தான் இருப்பார் சூர்யா. அதிகம் பேச மாட்டார். கார்த்தி சகஜமாக பேசுவார். இருவருடன் நடிக்கும்போதும் எனக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது. இவ்வாறு தமன்னா கூறினார்.
‘பையா படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த வெப்பத்தை உணர முடிகிறது. இப்படத்தை எடுத்துவிட்டு உயிரோடு திரும்பியதே பெரிய விஷயம். அந்தளவுக்கு ரிஸ்க் எடுத்திருக்கிறோம். தமிழ், தெலுங்கு இரு மொழியிலும் ஏப்ரல் மாதம் ரிலீசாகிறது. கிளொட் நைன் மூவிஸ் சார்பில் தயாநிதி அழகிரி படத்தை வெளியிடுகிறார்’ என்றார் லிங்குசாமி.
Comments
Post a Comment