Last Updated : ...
விஜய் டி.வி.யின் மாறுபட்ட நிகழ்ச்சிகளின் வரிசையில் அடுத்து வரும் புதிய மெகா தொடர் "யாமிருக்க பயமேன்'.பழனி என்றதுமே அனைவருக்கும் நினைவில் வருவது முருகக் கடவுள்தான். பழனி முருகன் சிலையை உருவாக்கியது போகர் சித்தர் என புராணங்கள் கூறுகின்றன. நவபாஷாணங்களால் உருவான அந்தச் சிலையைப் போன்றே போகர், இன்னொரு சிலையையும் உருவாக்கினார் என்றும் அது பழனி மலைப்பகுதியில் மறைந்துள்ளது என்றும் நம்பப்படுகிறது.அந்த இரண்டாவது சிலையைக் காலம் காலமாய் பல குழுக்கள் தேடி இறுதியில் தோல்வியையே சந்தித்துள்ளன. அந்தச் சிலையைப் பல தலைமுறைகளாகத் தேடி வரும் இரண்டு குடும்பங்களுக்கிடையேயான போராட்டங்களையும், அதன் பின்னணியில் வெளிப்படும் அரிய ஆன்மிக விஷயங்களையும் சுவாரஸ்யமாகக் கூறுவதே "யாமிருக்க பயமேன்' தொடரின் கதை.இதை விறுவிறுப்பும் பரப்பும் நிறைந்த ஒரு மர்ம தொடராக விஜய் டி.வி. தயாரித்துள்ளது. இரும்பைத் தங்கமாக்கும் ரசவாதக்கலையில் தேர்ந்த சித்தர்கள், பாதரசத்தை இறுகச் செய்து ஆபரணமாக அணிபவர்கள், மாயவித்தை மனிதர்கள், இன்றளவும் மனிதனுக்குப் பிடிபடாத இயற்கையின் இன்னொரு பரிமாணம் என பல அபூர்வமான விஷயங்கள் இந்தத் தொடரில் இடம்பெறுகின்றன.நாகா, ராம்ஜி ஆகியோரின் மூலக்கதைக்கு திரைக்கதை வடிவம் தந்திருப்பவர் எழுத்தாளர் இந்திரா செüந்தர்ராஜன். ஸ்ரீகிருஷ்ணா இசையமைத்துள்ளார்.வடிவுக்கரசி, மாஸ்டர் சாணக்கியா, சசி ஆனந்த், அனில், மஹாலட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்தப் புதிய தொடர், பிப்ரவரி 22}ம் தேதியிலிருந்து திங்கள் முதல் வியாழன் வரை இரவு 7.30 மணிக்கு விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.
Comments
Post a Comment