Venkat Prabhu's next hero Simbu?

கோ படத்திலிருந்து விலகிவிட்டார். போடா போடியும் கைவிடப்பட்டு விட்டது. வாலிபன் எப்போது தொடங்கும் என்று தெ‌ரியவில்லை. சிம்புவின் திட்டம் தெ‌ரியாமல் கையை பிசைகிறார்கள் கோடம்பாக்கத்தில். நெருங்கிப் பார்த்தால் நிலைகுலைய வைக்கிறது சிம்புவின் பியூச்சர் பிளான்கள்.

விண்ணைத்தாண்டி வருவாயா 26ஆம் தேதி வெளியாகிறது. தனது 25வது படமான இது சினிமா கே‌ரிய‌ரில் திருப்புமுனையாக இருக்கும் என்று நம்புகிறார். அதனால் இந்தப் படத்துக்குப் பிறகே அடுத்தப்பட வேலைகளை தொடங்குவது என்று முடிவெடுத்துள்ளார்.

மணிரத்னம் ரன்பீர் கபூரை வைத்து இயக்கப் போகும் இந்திப் படத்தின் தமிழ் பதிப்பில் சிம்பு நடிக்கயிருப்பதாக நம்பத்குந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன. அதேபோல் லிங்குசாமி தயா‌ரிக்கும் படத்தை பூபதி பாண்டியன் இயக்குவதாகவும், சிம்பு நடிப்பதாகவும் இருந்தது.

விக்ரம் படத்தை இயக்கும் வாய்ப்பு பூபதி பாண்டியனுக்கு கிடைத்திருப்பதால் லிங்குசாமி படத்தை தயா‌ரிப்பதுடன் சிம்புவை இயக்குவார் என கூறப்படுகிறது. இது விஜய்க்காக லிங்குசாமி உருவாக்கிய கதையாம்.

அதேபோல் வெங்கட்பிரபு தனது அடுத்தப் படத்தில் சிம்புவை நடிக்க வைக்கும் எண்ணத்தில் இருக்கிறார். இந்தப் படத்தை அம்மா கி‌ரியேஷன்ஸ் சிவா தயா‌ரிக்கிறார்.

இந்த மூன்று முக்கிய படங்கள் குறித்து இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் அதிகார‌ப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பதும் முக்கியமானது. 
 
After 'Goa' Venkat Prabhu is starting some thing as big as ‘Goa’. The film which was to be produced by Lingusamy and directed by Boopathy Pandian has now fallen on the lap of Venkat Prabhu. Boopathy Pandian is moving to direct Vikram for Mohan Natrajan and so Lingusamy has roped in Venkat Prabhu.
Venkat has already impressed Silambarasan with a story and his favourite Tamannah has also been signed to play the heroine.
Venkat is so exited about the new project that he has even reduced his remuneration substantially for producer Lingusamy.
Then what happened to the film in which Lingusamy was to direct Silambarasan? Lingusamy is busy on his entry into Bollywood and so Silambarasan is there for Venkat..
 

Comments

Most Recent