Trisha's adjustment for Kamal - யாவரும் கேளிர்.. கமல் நாயகி த்ரிஷா!






http://thatstamil.oneindia.in/img/2010/02/12-shriya-trisha200.jpg
யாவரும் கேளிர் படத்தின் 'ஸோலோ' நாயகி த்ரிஷாதான் என்பது உறுதியாகிவிட்டது. இதற்கான ஒப்பந்தத்திலும் அவர் கையெழுத்திட்டுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் இந்தப் படம் உறுதியானதுமே, தனது இந்தி மற்றும் தெலுங்குப் பட தயாரிப்பாளர்களிடம் 'கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளுங்கள்' என கேட்டுக் கொண்டு சென்னையில் முகாமிட்டுவிட்டார் த்ரிஷா.

தனது கால்ஷீட்டை மொத்தமாக கமலுக்கே கொடுத்துள்ளாராம் த்ரிஷா. ஏன் இந்த தாராளம்?.

"கமலுடன் நடிப்பதுதான் என் சினிமா லட்சியம்.​ ஏற்கெனவே மர்மயோகி படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டேன்.​ கமலுடன் ஒத்திகை பார்க்கும் அபூர்வ வாய்ப்பும் கிடைத்தது. அவர் எனக்கு தமிழ் கற்றுத்தந்த நாட்கள் மறக்க முடியாதவை. ஆனால் அந்தப் படம் சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.​ இப்போது யாவரும் கேளிர் வாய்ப்பு கிடைத்துள்ளது.​

இதையும் விட்டுவிட்டால் இனி கமலுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்குமோ என்னவோ?​ அதனால்தான் இந்தப் படத்துக்கு தொடர்ச்சியான கால்ஷீட் கொடுத்துவிட்டேன். மற்ற படங்களை விட கமல் சார்தான் எனக்கு முக்கியம்" என்று ஓவராக உணர்ச்சிவசப்படுகிறார் த்ரிஷா.

Comments

Most Recent