சுனாமி சோகம்... வீடு கட்டும் விஜய்! விஜய்யின் அரசியல் ஆசைக்கு மணி கட்டுவது போலவே அமைத்திருக்கிறார்களாம் சுறா படத்தின் கதையை! வழக்கமான பில...
சுனாமி சோகம்... வீடு கட்டும் விஜய்!
விஜய்யின் அரசியல் ஆசைக்கு மணி கட்டுவது போலவே அமைத்திருக்கிறார்களாம் சுறா படத்தின் கதையை! வழக்கமான பில்டப் சமாச்சாரங்கள் இந்த படத்திலும் தொடருமாம். "நான் மாற தயார். ஆனால் என்னை வச்சு வேறு ஃபார்முலாவில் படம் தயாரிக்க யாரு தயாரா இருக்காங்க?" என்று கேள்வி எழுப்பியிருந்தார் விஜய். ஒருவரும் தயாராக இல்லை என்பதையே நிரூபிக்கிறதாம் இவரது அறிமுகக் காட்சி.
கடலில் சுனாமி வருகிறது. வானை தொடுகிற அளவுக்கு அலைகளின் சீற்றம். ஊரே அஞ்சி ஓடிக் கொண்டிருக்க அந்த அலையில் படகை ஓட்டிக் கொண்டு ஸ்டைலாக அறிமுகம் ஆவாராம் விஜய். பின்னணியில் ஹோய்...ஹோய்... என்று பில்டப் கொடுப்பது தனி மேஜிக்!
படத்தின் மையக்கருவே சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு விஜய் எப்படி தன் முயற்சியால் வீடு கட்டி தருகிறார் என்பதுதானாம். இதற்காக புதிதாக கட்டப்பட்ட சுனாமி குடியிருப்புகளில் ஷ§ட்டிங் நடத்த தீர்மானித்திருக்கிறார்களாம்.
எதிர்வரும் காலத்தில் இளைய தளபதி பட்டத்துடன் இடி தாங்கி, சுனாமி சுறாவளி என்றெல்லாம் கோஷம் போட வசதியாக இருக்கும்.
Comments
Post a Comment