யுவன் ஷங்கர் ராஜாவுடன் மீண்டும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இல்லை என்றார் இயக்குனர் செல்வராகவன். அவர் கூறியதாவது: விக்ரம் நடிக்கும் படத்த...
யுவன் ஷங்கர் ராஜாவுடன் மீண்டும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இல்லை என்றார் இயக்குனர் செல்வராகவன். அவர் கூறியதாவது: விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறேன். இதற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். மீண்டும் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்புள்ளதா எனக் கேட்கிறார்கள். அதற்கான வாய்ப்பில்லை. தனுஷ், ஆண்ட்ரியா நடிப்பில் ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தை இயக்க இருந்தேன். இப்படம் டிராப் ஆகிவிட்டது. அஜீத்தை வைத்து படம் இயக்குவீர்களா என ரசிகர்கள் கேட்கிறார்கள். வாய்ப்பு அமையும்போது இயக்குவேன். அதே போல கமல்ஹாசனை இயக்குவதும் எனது விருப்பமாக உள்ளது.
சினிமாவை பொருத்தவரை நான் எல்லாம் கற்றவன் என நினைக்கவில்லை. இப்போதும் நிறைய கற்று வருகிறேன். இயக்குனராக விரும்புகிறவர்கள், நிறைய கதைகளை எழுதுங்கள். அதற்கான திரைக்கதையும் எழுதி, தயார்படுத்திக்கொள்ளுங்கள். இதுதான் புதிய இயக்குனர்களுக்கு நான் சொல்ல விரும்புவது. இவ்வாறு செல்வராகவன் கூறினார்.
Comments
Post a Comment