Nayanthara's reaction for Prabhu Deva's wife

http://thatstamil.oneindia.in/img/2010/02/10-prabu-nayan200.jpg
வெளியில் என்னதான் பரபரப்பாகப் பேசப்பட்டாலும் நயன்தாரா எந்த கவலையும் இல்லாமல் இருப்பதாகவே காட்டிக் கொள்கிறார்.

சிம்பு, பிரபுதேவா என அவரது நட்பு இப்போதும் தொடர்கிறது. முன்பை விட இப்போது அடிக்கடி சிம்புவைச் சந்திக்கும் நயன்தாரா, பிரபு தேவாவுடனான தனது உறவை 'கோயிங் ஸ்டெடி' எனும் அளவுக்குத் தொடர்கிறாராம்.

சமீபத்தில் முதல்வருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் அவர் பிரபுதேவாவுடன் சேர்ந்து மேடையில் ஆட்டம் போட்டார் பிரபு தேவா. இதைத் தொடர்ந்து அவரை உதைப்பதற்காகத் தேடுவதாக பகிரங்கமாக அறிவித்தார் பிரபு தேவா மனைவி ரம்லத்.

இதுகுறித்து நயன்தாராவிடம் நிருபர்கள் கேட்டனர். 'உதை' மேட்டருக்கு நேரடியாக வராத நயன்தாரா, சுற்றி வளைத்து ரம்லத்தை எச்சரிக்கும் விதத்தில் கருத்து கூறினார்.

அதற்கு பதிலளித்த நயன்தாரா, "நான் சந்தோஷமாக இருக்கிறேன். கடந்த ஆண்டுதான் எனக்கு கொஞ்சம் சோதனை. இந்த ஆண்டு எனக்கு நல்ல துவக்கம் கிடைத்துள்ளது. எனது படங்கள் பிரமாதமாகப் போகின்றன.

என் மீது யாரும் கை வைத்துவிட முடியாது. எனக்கும் எல்லாம் தெரியும். நான் என்ன செய்கிறேன் என்பது புரிந்துதான் செய்கிறேன். எனவே சும்மா யாரும் கத்த வேண்டாம். சிம்பு குறித்து எதற்காக என்னிடம் கேட்கிறார்கள் என்று புரியவில்லை.

அவருடன் இணைந்து நடனமாடியது மறக்க முடியாத நிகழ்ச்சி. மற்றபடி பிரபு தேவா குறித்த எந்தக் கேள்விக்கும் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இப்போது நான் சந்தோஷமாக, மகிழ்ச்சியாக இருக்கிறேன்.." என்றார்.

Comments

Most Recent