Nayanthara & Prabhu Deva celebrated Valentine's day



நயன்தாராவும், பிரபு தேவாவும் “மை நேம் இஸ் கான்” படம் பார்த்தும், நட்சத்திர ஓட்டலில் விருந்து சாப்பிட்டும் காதலர் தினத்தை கொண்டாடினார்கள். இதுவரை ரகசியமாக வைத்த காதலை தற்போது துணிச்சலாக வெளிப்படுத்தி வருகின்றனர். ஐதராபாத், திருவனந்தபுரம் நட்சத்திர ஓட்டல்களிலும், வெளி நாடுகளிலும்தான் இதற்கு முன் சந்தித்து வந்தனர்.
திரையுலகினர் முதல் வருக்கு நடத்திய விழாவில் ஒன்றாக நடனம் ஆடி முதல் தடவையாக சென்னையில் நெருக்கத்தை பகிரங்கப்படுத்தினார்கள். அதன்பிறகு துணிச்சலாக சேர்ந்து சுற்றுகிறார்கள்.
சென்னை மீனம்பாக்கத்தில் இருவரும் கைகோர்த்தபடி வந்ததை அங்கிருந்த பயணிகளும், ஊழியர்களும் கண்டு வியந்தனர். அதன்பிறகு காதலர் தினத்தை இருவரும் கொண்டினார்கள்.
மயிலாப்பூரில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டரில் ஷாருக்கானின் “மை நேம் இஸ் கான்” படத்தை அருகருகே உட்கார்ந்து பார்த்தார்கள். படம் முடிந்த பிறகுதான் ரசிகர்கள் அவர்களை அடையாளம் கண்டனர்.
பின்னர் கடற்கரையோரம் உள்ள ஒரு ரிசார்ட்டில் இருவரும் விருந்து சாப்பிட்டனர். காதலர் தினம் குதூகலமாக கழிந்தது.
இதற்கிடையில் மலையாள பத்திரிகை ஒன்றுக்கு நயன்தாரா பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனக்கு ஒருத்தரை பிடித்திருந்தால் தைரியமாக போவேன். அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன்.
பிரபுதேவா பெயரை என் கையில் பச்சை குத்தியிருப்பது ஏன் என்று எல்லோரும் கேட்கிறார்கள். இதை ஏன் பிரச்சினையாக்குகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை.
மக்கள் என்னை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. நாம் நமக்காக வாழ வேண்டும் என்ற கொள்கையில் எனக்கு நம்பிக்கை உண்டு. எதைபற்றியும் எனக்கு கவலை இல்லை.
இவ்வாறு நயன்தாரா கூறியுள்ளார்.

Comments

Most Recent