More political dialogues in Endhiran


எந்திரன் படத்தில் அரசியல் புயல் கிளப்பும் ரஜினி

கலைஞரை வணங்குவதோடு சரி. மற்றபடி அரசியலுக்கும் ரஜினிக்கும் இப்போதயை இடைவெளி, இமயத்தை படுக்க வைத்தால் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரம்! ஆனால் அப்படிப்பட்ட ரஜினி எந்திரனில் அரசியல் பேச போகிறார். அதுவும் நாட்டு நடப்பை பற்றி கொஞ்சம் சுடச்சுட!

எப்படி? படத்தில் இரண்டு ரஜினி என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான். அதில் ஒரு ரஜினி எந்திரன். மற்றொரு ரஜினி விஞ்ஞானி. இவரது முயற்சியால் உருவாக்கப்படும் இந்த எந்திரனுக்கு அவ்வப்போது சிந்திக்கும் திறனும் வந்து விடுமாம். ரஜினியின் உருவத்தில் ஐஸ்வர்யா ராயுடன் திருட்டு தனமாக டூயட் ஆடுகிற அளவுக்கு எல்லை மீறிய ரவுசு பண்ணுமாம் இந்த எந்திரன். அப்படி ஆடிக்கொண்டிருக்கும் போதே இயந்திர கோளாறு ஏற்பட்டு அது திடீரென்று எந்திரன் தோற்றம் எடுக்குமாம். அதிரும் ஐஸ்வர்யாராயை சமாளிக்க அது செய்யும் காமெடி காட்சிகளில் வயிறு குலுங்குவது நிச்சயமாம்.

இந்த சிந்திக்கும் ரோபோ ரஜினி திடீரென்று விஞ்ஞானி ரஜினியிடம் புதுக்கவிதை ஒன்றை எழுதி படித்துக் காட்டுமாம். அதில்தான் அரசியல் சட்டையர் செய்யப் போகிறார் ரஜினி. நா.முத்துக்குமார் எழுதியிருக்கும் அந்த வரிகள் யாரையும் புண்படுத்தாமல், அதே நேரத்தில் முக்கிய அரசியல் விஷயங்களையும் டீல் பண்ணியிருக்கிறதாம்.

ரஜினி தும்மினாலே நாலு கால நியூஸ். அரசியல் கவிதை வேறு படிக்கிறாரா? கலக்கல்தான் போங்க..

Comments

Most Recent