Meera Jasmine celebrates her b'day with Mandolin Rajesh

 http://thatstamil.oneindia.in/img/2010/02/17-meera-200.jpg
மாண்டலின் ராஜேஷைப் பிரிந்து விட்டார், வேறு ஒருவரை லவ்வுகிறார் என்றெல்லாம் ஏகப்பட்ட செய்திகளில் அடிபட்ட மீரா ஜாஸ்மின், தனது பிறந்த நாளை நேற்று முன்தினம் கொண்டாடினார்... பிரிந்துவிட்டதாகச் சொல்லப்பட்ட அதே மாண்டலின் ராஜேஷுடன்!

கடந்த ஆண்டு மாண்டலின் ராஜேஷை ரகசியமாக காதல் திருமணம் செய்து கொண்டார் மீரா ஜாஸ்மின் என்று செய்தி வந்தது. ஆனால் திருமணம் நடக்கவில்லை, இருவரும் சேர்ந்து வசிக்கிறார்கள் என்று பின்னர் கூறப்பட்டது.

இந் நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து கேட்டபோது, 'இப்போது நான் புதிய வாழ்க்கை வாழ்கிறேன்' என்று மர்மமாகப் பேசினார் மீரா.

ஆனால் கடந்த திங்களன்று மீராஜாஸ்மின் பிறந்த நாள். அன்று அவருக்கு 'பட்டின்டே பழஸி' என்ற மலையாளப் படத்தின் ஷூட்டிங். மைசூரில் நடந்த இப் படப்பிடிப்புக்கு வந்த மீராவுக்கு பெரிய சாக்லேட் கேக் ஒன்று பரிசளிக்கப்பட்டது, படக்குழுவினரால்.

மனோஜ் ஜெயன், ரேவதி, இயக்குநர் ராஜீவ் அஞ்சல் என எல்லோரும் மீராவைச் சூழ்ந்து நிற்க, அப்போது மீராவில் காரில் அமர்ந்திருந்த ராஜேஷ் சட்டென்று வெளியில் வந்தார்.

மீரா மகிழ்ச்சியுடன் அவரை தன் 'கணவர்' என்று அறிமுகப்படுத்தி வைத்தாராம். பின்னர் மீரா கேக் 'கட்' பண்ண, அதில் முதல் துண்டை எடுத்து மீராவுக்கு ஊட்டிவிட்டார் ராஜேஷ்.

தங்கள் காதல்/திருமண வாழ்க்கை இன்னும் 'கோயிங் ஸ்டெடி' என்று காட்டவே இந்த ஏற்பாட்டை மீரா ஜாஸ்மின் செய்திருக்கிரார் என்கிறார்கள் சினிமா வட்டாரத்தில்.

Comments

Most Recent