Kajala getting married to Allarai Naresh

http://www.cinesnacks.in/tamil-movies/actress/Kajala/thumbs/kajala-stills-006.jpg 
ராம், ராமன் தேடிய சீதை உள்பட பல படங்களில் நடித்தவர் கஜாலா. இவர் விரைவில் தெலுங்கு நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.

நடித்தப் படங்களில் எல்லாம் கஜாலாவுக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. என்றாலும் வாய்ப்புகள்தான் ச‌ரியாக அமையவில்லை. 2002ல் காதல் தோல்வியால் இவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதும் ஒரு காரணம்.

முதல் காதல் தோல்வியிலிருந்து மீண்டவர் தெலுங்கு நடிகர் அல்ல‌ரி நரேஷுடன் நடித்தபோது அவருடன் காதல் கொண்டார். அவருக்கும் இவர் மீது காதல்.

இந்த நட்சத்திர காதல் தற்போது இருவீட்டார் சம்மதத்துடன் கல்யாணம் வரை வந்திருக்கிறது. கஜாலாவுக்கு நம் அட்வான்ஸ் வாழ்த்துகள்.

Comments

Most Recent