தமிழ்நாட்டு குதிர என்னை அடக்க யாரு எதிர... என்ற குத்துப் பாடல் படமாக்கப்பட்ட இடத்தில் குழுமி நின்ற ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு துணை நடிகை...
தமிழ்நாட்டு குதிர என்னை அடக்க யாரு எதிர... என்ற குத்துப் பாடல் படமாக்கப்பட்ட இடத்தில் குழுமி நின்ற ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு துணை நடிகைககள் கையைப் பிடித்து இழுக்க, படப்பிடிப்பில் பரபரப்பேற்பட்டது.
அஜ்மல், சுனைனா ஜோடியாக நடிக்கும் படம் கதிர்வேல். வி. செந்தில் குமார் தயாரிக்கும் இப்படத்தை வெங்கட் இயக்குகிறார்.
இப்படத்துக்காக கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் பாடல்காட்சியொன்று நள்ளிரவில் படமாக்கப்பட்டது.
'தமிழ்நாட்டு குதிர என்னை அடக்க யாரு எதிர..' என்று தொடங்கும் பாடலுக்கு மும்பை கவர்ச்சி நடிகை தஷ்கவுசிக் நடனம் ஆடினார். அவருடன் 500 துணை நடிகர், 40 நடன கலைஞர்கள் மிகக் கவர்ச்சியான உடையில் ஆடினார்கள்.
விஷயம் தெரிந்ததும் படப்பிடிப்பை காண அங்கு பெரும் கூட்டம் கூடியது. ஆட்டத்தை ரசித்துக் கொண்டிருந்த ரசிகர்கள் சிலர் உணர்ச்சிவசப்பட்டு திடீரென துணை நடிகைகள் கையை பிடித்து இழுத்து ரகளை செய்தனர். நிலைமை மோசமானதை உணர்ந்த இயக்குனர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் விரைந்து வந்து கூட்டத்தினரை தடியடி நடத்தி விரட்டினார்கள். அதன் பிறகு படப்பிடிப்பு தொடர்ந்தது.
Comments
Post a Comment