எல்லாரையும் சிரிக்க வெச்ச என்னை அழ வைக்கிறாங்க… என்று நடிகர் வடிவேலு கூறியுள்ளார். ரூ.7 கோடி நில மோசடி குறி்த்து ஏற்கனவே சக காமெடி நடிகர் ச...
எல்லாரையும் சிரிக்க வெச்ச என்னை அழ வைக்கிறாங்க… என்று நடிகர் வடிவேலு கூறியுள்ளார். ரூ.7 கோடி நில மோசடி குறி்த்து ஏற்கனவே சக காமெடி நடிகர் சிங்கமுத்து மீது போலீசில் புகார் செய்த வடிவேலு, நேற்று சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜராகி ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், நான் கடந்த 20 ஆண்டுகளாக திரைப்டங்களில் நடித்து வருகிறேன். உலகம் முழுவதும் எனக்கு ரசிகர்கள் உள்ளனர். சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது பெற்று உள்ளேன். எனது சக நடிகரான சிங்கமுத்து வார பத்திரிகை ஒன்றில் பேட்டி கொடுத்திருந்தார். அந்த பேட்டியில் என்னை நரகாசுரன் என்று வர்ணித்து இருந்தார்.ஈழத் தமிழர்களுக்காக உயிர்நீத்த முத்துக்குமார் இரங்கல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வேதனையை வெளிப்படுத்தி இருந்தேன். இது நடிப்பு என்று பின்னர் நான் சொன்னதாக சிங்கமுத்து அந்த பேட்டியில் சித்தரித்திருக்கிறார். என் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த பேட்டி அமைந்து உள்ளது, எனது உதவியாளர்கள் மரணத்திற்கு நான்தான் காரணம் என்றும் பேட்டி அளித்து இருந்தார். இது பற்றி சிங்கமுத்துவுக்கும், வார பத்திரிகைக்கும் நோட்டீஸ் அனுப்பினேன். பத்திரிகை தரப்பில் மன்னிப்பு கோரப்பட்டு உள்ளது. ஆனால் சிங்கமுத்துவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. எனக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சிங்கமுத்து பேட்டி கொடுத்திருக்கிறார். இந்திய தண்டனை சட்டம் 499, 500 (அவதூறாக பேசுதல்) ஆகிய பிரிவின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.
மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட் திருமகள், வழக்கை மார்ச் 3ம்தேதிக்கு தள்ளி வைத்தார்.
பின்னர் கோர்ட்டில் இருந்து வெளியே வந்த வடிவேலு நிருபர்களுக்கு வேதனையுடன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், சிங்கமுத்துவின் நடவடிக்கையால் நான் ரொம்ப பாதிக்கப்பட்டுட்டேன். மனசுக்கு கஷ்டமா இருக்கு. அதனால் சினிமாவுல நடிக்க முடியல. தெனம் தெனம் மக்களை சிரிக்க வைக்கிறவன் நான். ஆனால் என்னை அழ வைக்கிறாங்க. இதனால சரியாக தொழிலில் ஈடுபட முடியவில்லை. இருந்தாலும் சினிமாவுல நான் கவனமா நடிச்சு தொடர்ந்து மக்களை சிரிக்க வைக்கும் பணியில் ஈடுபடுவேன். துரோகிகளுக்கு சட்ட ரீதியாக தண்டனை வாங்கி கொடுக்காமல் ஓயமாட்டேன், என்றார்.

Comments
Post a Comment