Cinthol offers a chance to play with Ramya Krishnan

சின்தால் சவால்... வென்றால் ரம்யா கிருஷ்ணனுடன் நடிக்கலாம்!

http://thatstamil.oneindia.in/img/2010/02/13-ramyakrishnan200.jpg


கோத்ரெஜ் நிறுவனத்தின் புகழ்பெற்ற தயாரிப்பான சின்தால் சோப் விளம்பரத்துக்காக ஒரு பெரிய போட்டியை அறிவித்துள்ளனர். இந்த போட்டியில் ஜெயிப்பவர்களுக்கு ரம்யா கிருஷ்ணனுடன் 'தங்கம்' தொடரில் நடிக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1952ம் ஆண்டு சின்தால் டியோடிரன்ட் அண்ட் கம்ப்ளெக்ஸன் சோப் அறிமுகமானது. மிகப் பிரபல பிராண்டாகத் திகழ்கிறது.

இப்போது சின்தால் சருமப் பாதுகாப்பு சவால் என்ற புதிய போட்டி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது சின்தால் தயாரிக்கும் கோத்ரெஜ் நிறுவனம்.

இதில் பங்கு பெற விருப்பம் உள்ளவர்கள் தங்கள் மொபைல் போனிலிருந்து Cinthol (space) name (space) age (space) address டைப் செய்து 56767 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இந்தப் போட்டிக்கான முதல்கட்டத் தேர்வுகள் சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி நகரங்களில் நடக்கும்.

ஒவ்வொரு நகரிலும் முதல்கட்டத் தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்கள், சென்னையில் நடக்கும் இறுதிக் கட்டப் போட்டியில் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதன் இறுதிகட்டப் போட்டியை தங்கம் தொடரின் நாயகி ரம்யா கிருஷ்ணன், திரையுலக இயக்குநர் குழு மற்றும் முன்னணி சரும மருத்துவர்கள் நடுவர்களாக இருந்து பார்வையிடுவார்கள்.. வெற்றி பெற்றவர்களைத் தேர்வு செய்து அறிவிப்பார்கள்.

வெற்றி பெற்றவர்கள் தங்கம் டிவி தொடரில் ரம்யா கிருஷ்ணனுடன் நடிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

Comments

Most Recent