Chennai Box office - Asal remains steady in No 1 place

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuvVVBexcuBZyWT5pCIVttLc7RLifa5cP24VByX53vrdpv6IS4r93ZKV2WtbDiYK-Isj3mHPgTx2UAu15dPDws0iIX9M9hhFlOcMnojLrcLlsVFGFJNPCf-9CawZq5VEOcmADoptTJJhZr/s400/asal-picajith.jpg 
சென்னை பாக்ஸ் ஆஃபி‌ஸில் அ‌ஜித்தின் அசல் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. சென்ற வாரம் வெளியான தீராத விளையாட்டுப் பிள்ளைக்கு இரண்டாவது இடம்.

5. ஆயிரத்தில் ஒருவன்
சென்ற வார இறுதியில் ஆயிரத்தில் ஒருவன் 3.6 லட்சங்களை வசூலித்துள்ளது. நான்கு வார இறுதியில் சென்னையில் இதன் மொத்த வசூல் 3.12 கோடிகள்.

4. கோவா
ச‌ரியான விளம்பரங்கள் இல்லாததும், தமிழ்ப் படத்தின் திடீர் பிக்கப்பும் கோவாவுக்கு பலத்த அடியாக அமைந்துள்ளது. சென்றவார இறுதியில் 10.2 லட்சங்களை மட்டுமே இப்படம் வசூலித்துள்ளது. இதன் மொத்த வசூல் 1.43 கோடிகள்.

3. தமிழ்ப் படம்
அபி‌ரிதமான விளம்பரங்கள், பாஸிடிவ்வான விமர்சனங்கள் தமிழ்ப் படத்தின் கலெ‌க்சனை அதிக‌ரித்துள்ளது. சென்றவார இறுதியில் 25.1 லட்சங்களை வசூலித்த இப்படம் இதுவரை 1.27 கோடிகளை வசூலித்துள்ளது.

2. தீராத விளையாட்டுப் பிள்ளை
சென்ற வாரம் வெளியான இப்படம் வெளியான முதல் மூன்று தினங்களில் 30.5 லட்சங்களை வசூலித்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

1. அசல்
அ‌ஜீத் படம் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. சென்ற வார இறுதியில் இப்படம் 37.1 லட்சங்களை வசூலித்துள்ளது. ஒரு வார முடிவில் இதன் சென்னை வசூல் 1.56 கோடிகள்.

Comments

Most Recent