எந்திரன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் நிலையில் இருப்பதால், இப்போதே அடுத்த திரைப்படத்தை இயக்குவதற்கு தயாராகி விட்டாராம் இயக்குனர் ஷங்கர்...
எந்திரன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் நிலையில் இருப்பதால், இப்போதே அடுத்த திரைப்படத்தை இயக்குவதற்கு தயாராகி விட்டாராம் இயக்குனர் ஷங்கர்.இம்முறை அவர் கையில் எடுத்திருக்கும் விடயம் 'காதலாம்'.
ஷங்கரின் 'போய்ஸ்' படத்தில் அறிமுகமாகி, இப்போதுதெலுங்கில், சூப்பர் ஹிட் நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் சித்தார்த்தினை வைத்தே, அடுத்த படத்தை இயக்கப்போகிறாராம் ஷங்கர்.
போய்ஸ், ஆயுத எழுத்து ஆகிய இரண்டு படத்துக்கு பிறகு தமிழில் தலை காட்டவே இல்லை சித்தார்த். ஆனால் தெலுங்கில் கொடி கட்டி பறக்கிறார். சமீபத்தில் சாம்லியுடன் நடித்து வெளியாகிய ஓயே திரைப்படமும், நல்ல பெயரை கொடுத்திருந்தது. தற்போது மீண்டும் ஷங்கர் கூட்டணியில் இணைய போகிறாரார்.
எந்திரன் வந்ததும், ஷங்கர் இது பற்றிய அறிவிப்பை விடுக்கவிருக்கிறாராம். சரி கோடம்பாக்கத்தில் கசிந்த தகவல்கள் இப்படி இருக்க, போன ஜனவரி மாதம் ஷங்கர் ஒரு அறிவிப்பை தனது இணைய தளத்தில் விடுத்திருந்தார்.
விஜய், அஜித் வைத்து எப்போது படம் எடுக்க போறீங்க? என கேட்கும் ரசிகர்களுக்கு தான் அந்த அறிவிப்பு. 'நாயகன்' ஸ்கிரிப்டை, மணி சார், அஜித்துக்கு தான் முதல்ல சொன்னாரு. அதே போல 'முதல்வன்' ஸ்கிரிப்ட்டை ரஜினி சாருக்கு சொன்ன பிறகு, விஜய்யிடம் தான் பண்ணுறீங்களான்னு கேட்டேன்! ஆனால் ரெண்டு பேருமே பண்ணல.நல்ல ஒரு ஸ்கிரிப்ட் மீண்டும் ரெடி பண்ணினா, நிச்சயம், அஜித், விஜய், ரெண்டு பேரையும் வைச்சு படம் எடுக்கிறேன்.' இதான் அந்த அறிவிப்பு!

Comments
Post a Comment