சென்னை, பிப்.3: திரைப்பட தொழிலாளர்களுக்காக பையனுர் நிலத்தில் அண்ணா திரைப்பட நகரம் உருவாகிறது.இது குறித்து புதன்கிழமை செய்தியாளர்களிடம் ஃப...
சென்னை, பிப்.3: திரைப்பட தொழிலாளர்களுக்காக பையனுர் நிலத்தில் அண்ணா திரைப்பட நகரம் உருவாகிறது.இது குறித்து புதன்கிழமை செய்தியாளர்களிடம் ஃபெப்சி தலைவர் வி.சி.குகநாதன் கூறியது: திரைப்பட நகரத்துக்கு "அண்ணா திரைப்பட நகரம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்பட நகரம் ஹாலிவுட் தரத்தில் அமைக்கப்படும். திரைப்பட நகரத்தின் பிரிவுகளுக்கு எம்.ஜி.ஆர்., சிவாஜி, வாசன், ஸ்ரீதர், கே.வி.மகாதேவன், எம்.பி.ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் பெயர்கள் சூட்டப்படுகிறது.10 மாடி, 15 மாடி அளவில் குடியிருப்புகள் உருவாக இருப்பதால், தெருக்கள் அகலமாக இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு முதல்வர் கூடுதலாக 6 ஏக்கர் நிலம் வழங்கியிருக்கிறார். திரைப்பட நகர உருவாக்கத்துக்கு சில வங்கிகளின் உதவிகளை நாடியிருக்கிறோம். வங்கிகள் மூலமாக ரூ. 750 கோடி நிதி பெற முயற்சிக்கிறோம் என்றார்.
Comments
Post a Comment