கைவிட்டுப்போகும் வீடு...! கண்ணீரில் மிதக்கும் காதல் ஜோடி!

“செந்தூரப் பூவே நீயும் தேன் சிந்த வா... வா..” என்ற ஆபாவணனின் மெட்டில் அமைந்த பாடலை கையில் டேப் வைத்து அடித்தபடி ராம்கி பட... பரந்த பசுமைச் சமவெளியில் நிரோஷா ஒரு கருப்பு தேவதை போல துள்ளி ஒடுவதையும் ரசித்து உருகாத தமிழ் ரசிகள் மிக்க்குறைவு. அந்த அளவுக்கு ராம்கி –நிரோஷா காதல் 90களின் தொடக்கத்தில் பிரபலம். செந்தூரப்பூவே படம் உட்பட பல படங்களில் ஜோடியாக நடித்த ராம்கி-நிரோஷா ஜோடி, நிஜ வாழ்க்கையிலும் காதல் ஜோடிகளானா
இவர்களின் வாழ்கையில் இப்போது கண்ணீரில் மிதக்கிறது.ஒரே மாதிரியான நடிப்பு, ஒரேமாதிரியான பாத்திரங்கள் என்று திரைவாழ்கையை அமைத்துக்கொண்ட ராம்கி ஒரு கட்டத்துக்குப் பிறகு வாய்ப்புகளை இழந்தார். கமல் வரை ஜோடி சேர்ந்து நடித்த நிரோஷா மார்கேட்டை இழந்ததும் சின்னத்திரையில் ஒரு ரவுண்ட் அடித்தார். நன்றாகப் போய்கொண்டிருந்த இவர்களது வாழ்கையில் நுழைந்தது நெட் ஒர்க் மார்கெட்டிங் எனும் கேடு. யாரோ தவறுதலாக வழிகாட்டியதில் இவர்கள் இருவரும் இணைந்து 'நியூ லைன்ஸ் பிசினஸ் இந்தியா பிரை வேட் லிமிடெட்' என்ற நிறுவனத்தை துவங்கி சொந்தமாக தொழில் செய்ய முனைந்தபோது  தேவைப்பட்ட பணத்துக்காக தங்கள் வசித்து வந்த சென்னை அண்ணாசாலை ஜெமினி பார்சன் அபார்ட்மென்டில் உள்ள இரண்டு அபார்ட் மெண்டுகளை, ஜெமினி சர்க்கிளில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் அடமானமாக வைத்து கடன் வாங்கியிருக்கிரார்கள்.
முதலை வாயில் போட்டால் எப்படி திரும்ப வராதோ அப்படி மார்கெட்டிங் தொழிலில் போட்ட பணம் திரும்ப வராத்தால் பெருத்த நஷ்டம் சுழற்றி அடிக்க, கடன் தவணை தொகையை குறிப்பிட்டபடி செலுத்த முடியவில்லை. இதனால் வங்கி சார்பில் பல முறை நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டதில் பெரும் மன உழைச்சலுக்கு ஆளான இருவரும் தங்கள் உறவினர்களிடம் போய் நிற்க மனமின்றி தவித்த நிலையில் அவர்களை யாரும் கண்டு கொள்ளவே இல்லையாம். இதனால் இப்போது கண்ணீரில் மிதக்கிறது இந்த காதல் ஜோடி.
இந்நிலையில் இவர்கள் அடமானம் வைத்த சொத்துக்களை கடந்த ஆண்டு டிசம்பர் பத்தாம் தேதி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி எடுத்துக்கொண்டது. இருவரும் வாங்கிய கடன் தொகை வட்டியுடன் சேர்த்து ஒரு கோடியே 46 லட்சத்து 58 ஆயிரத்து 628 ரூபாய் என வங்கி தரப்பில் கணக்கிடப்பட்டு உள்ளது. இந்த தொகைக்காக இரு சொத்துக்களையும் ஏலம் விட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முடிவு செய்துள்ளதாம். தரை மற்றும் முதல் தளத்துடன் கூடிய 2500 சதுர அடி வீட்டின் குறைந்த பட்ச கேட்பு தொகையாக ரூ.2 கோடியே 25 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 432 சதுர அடி குடியிருப்பின் குறைந்த கேட்பு தொகை ரூ.28 லட்சமாக நிர்ணயித்துள்ளனர்.
மார்ச் பத்தாம் தேதி ஜெமினி சர்க்கிளில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் இவர்களின் வீடுகள் ஏலத்தில் விடப்படுகிறது என நீதிமன்ற செய்தி சேகரிப்பு நிருபர்கள் தகவல் தருகிரார்கள்.
பாவம் இந்த காதல் ஜோடி. நிரோஷா தரப்பில் முன்ன்னி நட்சத்திரங்கள் அவரது அக்கா, அண்ணனாக இருந்தும் இவரைக் கண்டு கொள்ளாத்து வேதனைதான்! பணம் மட்டும்தான் வாழ்கையா?

Comments

Most Recent