'அவதார்' நடிகருடன் மல்லிகா ஷெராவத்!

 http://thatstamil.oneindia.in/img/2010/02/03-mallika-sherawat200.jpg

அவதார் பட நடிகர் லாஸ் அலோன்சாவுடன் ஒரு அரசியல் காமெடிப் படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார் நம்ம ஊர் மல்லிகா ஷெராவத்.

லவ், பாரக் என்ற பெயரில் ஹாலிவுட்டில் உருவாகும் படம் இது. இதில் லாஸ் அலோன்சாவுடன் இணைந்து நடிக்கிறாராம் மல்லிகா ஷெராவத்.

அமெரிக்க இயக்குநர் டோக் மெக்கென்றி இப்படத்தை இயக்குகிறார்.

அரீதா குப்தா என்ற கேரக்டரில் நடிக்கிறாராம் மல்லிகா. அமெரிக்க அதிபர் தேர்தலை மையமாகக் கொண்ட கதை இது.

அதிபர் ஒபாமாவின் ஆதரவாளர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இதில் வருகிறார் மல்லிகா.

கதை என்னவென்றால், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர் அரீதா குப்தா. ஒபாமாவுக்காக தீவிரப் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக குடியரசுக் கட்சியின் ஜான் மெக்கெய்னுக்காக பிரசாரம் செய்து கொண்டிருக்கும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அலோன்சாவுடன் காதல் மலர்ந்து விடுகிறது.

இந்தக் காதலை, அரசியல் பின்னணியில் அட்டகாசமாக சொல்கிறார்களாம் இப்படத்தில்.

இதுகுறித்து மல்லிகா கூறுகையில், மிகவும் அருமையான, திறமையான, ஆச்சரியகரமான நடிகர் லாஸ். அவருடன் பணியாற்றுவதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன் என்றார்.

ஏற்கனவே ஜாக்கி சானுடன் மித் என்ற படத்தில் நடித்திருந்தார் மல்லிகா. ரொம்ப குட்டியூண்டு கேரக்டர் அது. அதேபோல ஹிஸ் என்ற ஒரு ஹாலிவுட் படத்திலும் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Most Recent