சிங்கமுத்து மீது மேலும் ஆதாரங்களை தந்த வடிவேலு!

http://thatstamil.oneindia.in/img/2010/02/06-vadivel200.jpg
சென்னை: தன்னை ரூ 7 கோடி ஏமாற்றிவிட்டதாக நடிகர் சிங்கமுத்து மீது குற்றம்சாட்டிய நகைச்சுவை நடிகர் வடிவேலு, அதற்கான ஆதாரங்கள் முழுவதையும் நேற்று போலீசாரிடம் கொடுக்கார். இதைத் தொடர்ந்து சிங்கமுத்து மீது மேலும் ஒரு வலுவான வழக்கு பதிவாகிறது.

திரையில் நகைச்சுவை காட்டி வந்த நடிகர்கள் வடிவேலுவும், சிங்கமுத்துவும் இப்போது நிஜத்தில் கடுமையாக மேதிக் கொண்டுள்ளனர்.

படிக்காத தனது அறியாமையைப் பயன்படுத்தி, நிலம் வாங்கி தருவதாகக் கூறி ரூ.7 கோடி மோசடி செய்துவிட்டார் சிங்கமுத்து என்றும், இதுபற்றி கேட்டபோது, கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் வடிவேலு, சிங்கமுத்து மீது பரபரப்பான புகார்களை கூறியுள்ளார். ஆனாலும் அவர் இன்னும் தலைமறைவாக இருந்தபடி முன்ஜாமீனுக்கு முயற்சித்து வருகிறார்.

பதிலுக்கு வடிவேலு மீது சிங்கமுத்து பல புகார்களைக் கூறியுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நடிகர் வடிவேலு சென்னை நகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து 2 புகார் மனுக்களை கொடுத்தார்.

ஒரு புகார் மனுவின் அடிப்படையில் விருகம்பாக்கம் போலீசார், நடிகர் சிங்கமுத்து மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்துள்ளனர். நில பிரச்சினை சம்பந்தமாக கொடுத்த புகார் மனு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த புகார் மனுவுக்கு வலுசேர்க்கும் வகையில் சில ஆவணங்களை போலீசார், வடிவேலுவிடம் கேட்டனர்.

இதையொட்டி, நேற்று காலை 10.30 மணியளவில் வடிவேலு மீண்டும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரனை சந்தித்துப் பேசினார். அப்போது, சிங்கமுத்துக்கு எதிரான சில முக்கியமான ஆவணங்கள் பலவற்றைக் கொடுத்துள்ளார்.

ஆணையரைச் சந்தித்த பின்னர் கூடுதல் ஆணையர் ரவி, உளவுப்பிரிவு துணை ஆணையர் சத்தியமூர்த்தி, உளவுப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் இளங்கோ ஆகியோரையும் வடிவேலு சந்தித்துப் பேசி தனது பக்க நியாயத்தை எடுத்துச் சொன்னார்.

ஆணையர் அலுவலகத்துக்கு வடிவேலு வந்த விஷயம் தெரியாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. அவரது காரையும் மறைத்து நிறுத்தியிருந்தனர். ஆனாலும் நிருபர்களுக்கு விஷயம் தெரிந்து குவிந்துவிட்டனர். வடிவேலுவைச் சூழந்து கொண்டு விவரம் கேட்டனர்.

அவர், "அதான் என் போட்டோவை அன்னைக்கே போட்டுட்டீங்களேப்பு, இப்போது எதற்கு?" என்று கேட்டபடி நிருபர்களின் கேள்விக்கும் பதில் சொல்லாமல் காரில் ஏறி வேகமாகப் போய்விட்டார்.

வடிவேலு கொடுத்த ஆவணங்கள் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், சிங்கமுத்து மீது புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மான நஷ்ட வழக்கு...

இதற்கிடையே, தலைமறைவாக இருந்தபடி தன்னைப் பற்றிய பகீர் புகார்களைச் சொல்லி வரும் சிங்கமுத்துவுக்கு எதிராக மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என்றும் அறிவித்துள்ளார் வடிவேலு. இது குறித்து வடிவேலுவின் வழக்கறிஞர் பால் கனகராஜ் நாளை மறுநாள் மனுதாக்கல் செய்கிறார்.

Comments

Most Recent