Ameer and Jayam Ravi joining in 'Aadhibhagavan'

[Ameer-Aadhibhagavan-movie-stills-02.jpg]
இயக்குனர் அமீர் ஜெயம் ரவி நடிப்பில் தான்  இயக்கவிருக்கும் அடுத்த படம் 'ஆதிபகவன்' என பெயரிட்டுள்ளார். இப்படத்தின் அறிமுகவிழா இன்று சென்னையில் நடைபெற்றது.
இப்படத்தினை அன்பு பிக்சர்ஸ் சார்பில் J.அன்பழகன் தயாரிக்கிறார்.இவர் தி.மு.க.வின் தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆவார்.இதற்கு முன்பு இவர் சில படங்களில் வினியோகஸ்தராக இருந்துள்ளார்.

இப்படத்திற்கு அமீரின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

மேலும் இப்படத்தில்,

பாடல்கள்: சினேகன்
கலை: ஜான்சன்
எடிட்டர்: சுதர்சன்
கேமராமேன்கள்: குருதேவ் & தேவராஜ்
மக்கள் தொடர்பு: நிகில்

ஆகியோர் இப்படத்தில் பணியாற்றுகிறார்கள்.

இப்படத்தின் படபிடிப்பு மார்ச் மாதம் தொடங்குகிறது. இப்படம் 2011 பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது.

இதுவரை தமிழ்த்திரையுலகில் 'சாக்லேட் பாயாக' வலம் வந்து கொண்டிருந்த ஜெயம் ரவி இப்படத்தில் தாடியுடன் வித்தியாசமான காதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

இது சென்னை வசிக்கும் ஒரு இளைஞனின் கண்மூடித்தனமான காதல் கதை என இயக்குனர் அமீர் தெரிவித்தார்.

இப்படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கும் கதாநாயகிக்கான தேடல் நடப்பதாகவும், அது பெரும்பாலும் பிரியாமணியாக இருக்கலாம் எனவும் இயக்குனர் அமீர் சூசகமாகத் தெரிவித்தார்.
மேலும், இது முற்றிலும் ஜனரஞ்கமான, வித்தியாசமான அமீர் படம் எனவும், இதில் கமர்சியல் அம்சங்ளான குத்துப் பாட்டு மற்றும் முத்தக்காட்சி போன்றவை இடம்பெறும் என்றும் அமீர் தெரிவித்தார்.
ஏற்கனவே,ஜெயம் ரவி-அமீர் இணைவதாக இருந்த கண்ணபிரான் திரைப்படம் 'ஆதிபகவன்' முடிந்த பின்பு தொடங்கப்படும் என்றும், இது கமர்சியல் சாயல்கள் இல்லாத வித்தியாசமான முயற்சியாக இருக்கும் எனவும் அமீர் தெரிவித்தார்.


The introductory press meet of Ameer’s next venture took place today in Chennai. The film, which has Jayam Ravi in the lead, has been titled Aadhibhagavan. The shooting of Aadhibhagavan will begin in March. Aadhibhagavan comes with a tag line Kanmoodithanamana Kadhal which means irrational love.

There were reports earlier that Jayam Ravi and Ameer would work together in Kannabiran but the director said that the project has been shelved for the time being. Ameer revealed that this is the first time he is making a film for a hero while for all his earlier films he would pick out the hero only after finalizing script.

The music for this film is being scored by Yuvan Shankar Raja. Gurudev will be in charge of the camera. Aadhibhagavan’s producer J Anbazhagan is a former MLA belonging to the DMK Party. Speaking about J Anbazhagan, Ameer said that he was on the look out for a producer who would agree to his budget and he fitted the bill.

Comments

Most Recent