பல கோடி ரூபாய் நில மோசடி தொடர்பாக நடிகர் வடிவேலு அளித்த புகாரின் பேரில், நடிகர் சிங்கமுத்து மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையட...
பல கோடி ரூபாய் நில மோசடி தொடர்பாக நடிகர் வடிவேலு அளித்த புகாரின் பேரில், நடிகர் சிங்கமுத்து மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து சிங்கமுத்து தனது குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டதாக தெரியவந்துள்ளது. இவரை போலீஸôர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
நடிகர்கள் வடிவேலு, சூர்யா உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த 5 பேரின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த 19ம் தேதி சோதனை நடத்தினர்.
விருகம்பாக்கத்தில் உள்ள வடிவேலுவுக்குச் சொந்தமான வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதே நேரத்தில் மதுரை விரகனூரில் உள்ள அவரது வீட்டிலும் வருமான வரி சோதனை நடந்தது.
இதில் சில முக்கிய சொத்து ஆவணங்களை சரிபார்த்தபோது, பெரும்பாலானவை புறம்போக்கு நிலங்கள், சுடுகாட்டு மனைகள் என்பது தெரியவந்தது.
இதில் ரூ.7 கோடி அளவுக்கு தான் மோசடி செய்யப்பட்டதாக வடிவேலுவுக்குத் தெரியவந்தது.
இதையடுத்து இந்த நிலம் மற்றும் வீட்டு மனைகளை வாங்கித் தந்த தனது நண்பரும் சக நடிகருமான சிங்கமுத்துவிடம் பணத்தைத் திருப்பித் தருமாறு வடிவேலு கேட்டுள்ளார்.
ஆனால், சிங்கமுத்துவும், வடபழனி பகுதியைச் சேர்ந்த சிலரும் வடிவேலுவை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வடிவேலு அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ÷இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில் தனிப்படை போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.
போலீஸôர் சமரச முயற்சி…இது தொடர்பாக சிங்கமுத்துவையும், வடிவேலுவையும் அழைத்துப் பேசி சமரசத் தீர்வு காண போலீஸôர் முயற்சி மேற்கொண்டனர்.
ஆனால், போலீஸôர் தன்னை கைது செய்யக் கூடும் என்று அஞ்சியதால், சிங்கமுத்து தனது குடும்பத்தினருடன் தலைமறைவாகி விட்டார். ÷வடபழனியைச் சேர்ந்த உதவி இயக்குநர் உள்ளிட்ட இவரது நண்பர்களும் தலைமறைவாகிவிட்டனர்.
இதையடுத்து நெசப்பாக்கம் கோத்தாரி நகரில் உள்ள சிங்கமுத்துவின் வீட்டை போலீஸôர் கண்காணித்து வருகின்றனர்.
வடிவேலு பேட்டி: இந்த நிலையில் செய்தியாளர்களிடம் வடிவேலு புதன்கிழமை கூறியதாவது:
சினிமாவில் சம்பாதித்த பணத்தில் நிலம் வாங்க நினைத்து, என்னுடன் நடித்த சிங்கமுத்துவை நம்பி பல கோடி ரூபாய் முதலீடு செய்தேன்.
ஆனால், எனது வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் நடத்திய சோதனைக்குப் பின்னரே நான் வாங்கிய நிலங்கள் புறம்போக்கு நிலங்கள் என்பது தெரியவந்து அதிர்ச்சி அடைந்தேன்.
திரைப்படங்களில் ஏமாளியாக நடித்த நான் நிஜ வாழ்க்கையிலும் ஏமாற்றப்பட்டேன்.
சிங்கமுத்துவிடம் எனது பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டேன். ஆனால், அவர் நேரடியாகவும், ஆள்களை வைத்தும் மிரட்டினார். எனது உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்கக் கோரி போலீஸôரிடம் புகார் செய்துள்ளேன்.
இழந்த பணத்தை எப் பாடுபட்டாவது மீட்பதில் உறுதியாக உள்ளேன் என்றார் வடிவேலு.
Comments
Post a Comment