Rajini released ‘Goa’ music on Monday Jan. 4




வந்தாச்சு கோவா பாடல்கள் - வெளியிட்டார் ரஜினி!


கோலகலமாக கொண்டாடப்பட வேண்டிய கோவா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கொசு அடிக்கிற நேரத்தில் நடந்து முடிந்திருக்கிறது. அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினி வீட்டிலேயே!

டிசம்பர் மாதத்திலேயே இந்த ஆடியோ விழாவை மிக பிரமாண்டமாக கொண்டாட முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் அதை கெடுக்கும் விதத்தில் அமைந்தன சில சம்பவங்கள். இதனால் மூட் அப்செட் ஆன ரஜினி, ஆடியோ ரிலீசையே தள்ளிப் போட்டார். ஜனவரி 4-ந் தேதி சன் மியூசிக்கில் முக்கிய விருந்தினர்கள் முன்னிலையில் ரஜினி வெளியிடுவார் என்று மற்றொரு எதிர்பார்ப்பு. ஆனால் அன்று காலையில் ஆடியோ வெளியீடு என்ற எந்த விளம்பரங்களும் செய்திதாள்களில் வராததால், என்னாச்சு? என்று ஏகப்பட்ட விசனத்தோடு காத்திருந்தார்கள் ரசிகர்கள்.

ஆனால் சொன்ன மாதிரியே நல்ல நாளான நாலாந் தேதி கோவா படக்குழுவினரை வீட்டுக்கு வரச்சொல்லி விட்டாராம் ரஜினி. மாலை ஆறு மணிக்கு கூடிய கோவா டீம், ரஜினி கையால் ஆடியோவை வெளியிட வைத்து சந்தோஷப்பட்டிருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன் கோவா படத்தின் சிறு சிறு பகுதிகளை பார்த்து பிரமித்து போனாராம் ரஜினி. ஆடியோவை வெளியிடும்போது “முழு படத்தையும் பார்க்க ஆர்வமா இருக்கேன். எப்போப்பா காட்ட போறீங்க” என்று அவர் கேட்டதையே பெரிய பாக்யமாக கருதினாராம் வெங்கட்பிரபு.

இதே தேதியில்தான் அசல் படத்தின் ஆடியோவை வெளியிட வரப்போகிறார் ரஜினி என்ற செய்திகளும் றெக்கை கட்டி பறந்தன. ஆனால் அங்கும் வரவில்லை ரஜினி. என்னாச்சு சூப்பர் ஸ்டாருக்கு?


At a time when everyone was expecting a grand audio launch function of ‘Goa’, since it is the maiden production venture of Soundarya Rajinikanth’s Ocher Studios, the film had its music launch in a simple way on Monday.

The music album of the movie was released by Superstar Rajinikanth at his residence in Chennai. The simple function was attended by the cast and crew of the film directed by Venkat Prabhu, besides officials from Sony Music.

Says Venkat Prabhu, “I feel proud that Goa’s audio was released by the Superstar. He is always there to encourage us right from the days of ‘Chennai 6000028’. He is hopeful that ‘Goa’ would become a super hit.”

On the film’s music, he says, “Yuvan always comes up with special tunes for my films. He has repeated the magic in ‘Goa’ too. All the songs have come out well. They would rock audio charts soon.”


Comments

Most Recent