பிரபல பாடகர் சோனு நிகாம் மருத்துவமனையில் அனுமதி



மும்பை: பிரபல பின்னணி பாடகர் சோனு நிகாம் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

36 வயதான சோனு நிகாம் சமீப காலமாக அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையே தொடர்ந்து சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு வந்ததால் மிகவும் சோர்வடைந்து விட்டார்.

ரத்த அழுத்தக் குறைவு, முதுகுப் பகுதியில் எலும்பு பிசகு போன்ற பிரச்னைகளால் அவதிப்பட்டதாக அவரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதையடுத்து மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் நிகாம். அங்கு சிகிச்சை பெற்றுவரும் அவர் விரைவில் குணமடைந்து வீடு வருவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Most Recent