4 வருஷங்களில் 32 படங்களை முடித்து, தமிழில் "இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்' உள்ளிட்ட 5 படங்களின் ரிலீசுக்...
4 வருஷங்களில் 32 படங்களை முடித்து, தமிழில் "இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்' உள்ளிட்ட 5 படங்களின் ரிலீசுக்குக் காத்திருக்கிறார் பத்மபிரியா.வித்தியாசமான கேரக்டர்களிலே விருப்பமா? சினிமாவில் எல்லோருக்கும் தனி ஸ்டைல் இருக்கிறது. சினிமா என்பது என் வாழ்க்கையில் எதிர்பாராமல் கிடைத்த ஒன்று. எந்த துறையாக இருந்தாலும், களம்தான் அங்கீகாரத்தையும், அடையாளத்தையும் முடிவு செய்கிறது. எனக்குப் பிடித்த இடங்களில் பிடித்ததைச் செய்கிறேன். அதில் வித்தியாசம் இருந்தால் நல்லதுதான். விருதுகளைக் குறி வைத்து நடிக்கவில்லை; கிடைக்கும் களத்தில் முழுமையாக இயங்க தயாராக இருக்கிறேன்.அப்படியென்றால் கிளாமர்? "சத்தம் போடாதே', "பட்டியல்', "மிருகம்'"பொக்கிஷம்' என ஒவ்வொரு படமும் வித்தியாசமாக கிடைத்ததே தவிர, கிளாமர் இன்னும் கிடைக்கவில்லை என்று சொல்லலாம். மற்ற மொழிகளில் என் அடையாளம் வேறு மாதிரியாக இருந்தாலும் இருக்கலாம். கிளாமரையும், வித்தியாசத்தையும் இங்கு கதையும் அதையொட்டிய களமும்தான் முடிவு செய்கிறது. கிளாமர் செய்ய மாட்டேன் என்று எப்போதும் சொல்லியதில்லை. அதற்கான நேரம் வரும் என எதிர்பார்ப்போம்.ஐந்து மொழிகளில் நடிக்கிறீர்களாமே? ஆமாம். ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் என சினிமா வாழ்க்கை வேகமாக போய்க் கொண்டிருக்கிறது. அனைத்து மொழி சினிமாக்களுமே நல்ல களத்தை எற்படுத்திக் கொடுத்திருக்கின்றன. இப்போது ஐந்து மொழிகளிலும் தலா ஒவ்வொரு படம் ரிலீசுக்குக் காத்திருக்கிறது என்பதை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த அனுபவம் மொத்த இந்திய சினிமாவிலும் என்னை இயங்க வைத்தாலும் வைக்கலாம் ஆச்சரியமில்லை.எந்த மொழியில் முன்னணி... முன்னணியை எதிர்பார்த்து எந்த மொழிக்கும் போகவில்லை. எல்லா மொழிகளிலும் எனக்கு திருப்தி வரும் அளவுக்கு நடித்து விட்டேன். இதை விட வித்தியாசமாக இயங்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அப்படி இயங்கினால் கிடைக்கும் இடத்துக்கு முன்னணி என்று பெயர் வைத்துக் கொள்ளலாம். அது எந்த மொழியில் கிடைக்கும் எனத் தெரியவில்லை. 4 வருஷ சினிமா வாழ்க்கையில் நான் நடித்த கேரக்டர்கள் எல்லாமே மக்கள் ரசிக்க கூடியதாக இருந்திருக்கின்றன. திடீரென நாளைக்கே நல்ல மாப்பிள்ளை கிடைத்தால் திருமணம் செய்து கொண்டு போய் விடுவேன். இதனால் முன்னணியில் நம்பிக்கை இல்லை."இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்'... "கௌபாய்'களின் உலகத்தைப் பற்றிய கதை. பாலி என்ற கேரக்டரில் நடிக்கிறேன். கௌபாய் கதை, காமிக்ஸ் என சிறு வயதில் ஆர்வமாக இருந்திருக்கிறேன். இப்போது அதே போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பது புதிய அனுபவமாக இருக்கிறது. இதுவும் தமிழ் சினிமாவில் எனக்கு கிடைத்த மற்றொரு வித்தியாசமான கேரக்டர். முழுமையான எண்டர்டெயின்மெண்ட் சினிமாவாக இருக்கும்.
Comments
Post a Comment