"கோலங்கள்' உள்ளிட்ட சில சீரியல்கள் தனது உயிர் துடிப்பை நிறுத்திக் கொள்ள, புது சீரியல்களை களம் இறக்கி வருகிற...
"கோலங்கள்' உள்ளிட்ட சில சீரியல்கள் தனது உயிர் துடிப்பை நிறுத்திக் கொள்ள, புது சீரியல்களை களம் இறக்கி வருகிறது சன் டி.வி. "இதயம்', "மாதவி' என அவற்றில் சில மக்களிடம் சென்று சேராத நிலையில், "டீலா நோ டீலா'வில் பங்கேற்க சீரியலைப் பாருங்கள் என விளம்பரப்படுத்தி வருகிறது. இந்த யுக்தி வரப் போகிற சீரியல்களுக்கும் தொடருமாம்.இரண்டு நிமிட விளம்பரம் என்றாலும், இரண்டு மணி நேர படம் என்றாலும் இரண்டரை கோடி ரூபாய் கேட்கிறாராம் தீபிகா படுகோன். ஆரம்ப காலத்தில் வாய்ப்புகள் கொடுத்து விளம்பர உலகில் முன்னணியாக்கிய சில நிறுவனங்களிடமே சம்பள விஷயத்தில் கறாராக இருக்கிறாராம். தீபிகாவின் இடத்துக்கு வேறு ஒருவரை கொண்டு வர சில நிறுவனங்கள் முயற்சிக்கிறதாம்.அடுத்த அமளி துமளிக்கு ரெடியாகி விட்டது ரித்திஸின் "வேட்டைப்புலி'. டெல்லி மீடியாக்களின் வெளிச்சத்தால் எக்கசக்க உற்சாகமானதில் ஹிந்தி சினிமாவிலும் கவனம் செலுத்தும் எண்ணத்தை வைத்திருக்கிறாராம். தமிழில் தான் நடிக்கும் "வேட்டைப்புலி' படத்தை "துஷ்மன்' என்ற பெயரில் ஹிந்திக்கு கொண்டு சென்று பெரிய ஓப்பனிங் கொடுக்கப் போகிறாராம்.ராம்கோபால் வர்மா இயக்கத்தில் விவேக் ஒபராய் } சூர்யா இணையும் படத்துக்கு "ரக்த } சரித்திரா' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தாதாவின் அரசியல் பரிமாணம்தான் கதையாம். செல்வராகவனின் "புதுப்பேட்டை' ஸ்டைலில் உருவாகும் இப்படத்தில் சீனுக்கு சீன் இரத்தம் தெறிக்குமாம்.நான் கடவுளுக்குப் பின் அடுத்தடுத்த சினிமா அறிவிப்புகளுக்கு தாமதம் காட்டி டி.வி. நிகழ்ச்சிகளில் வந்த பூஜா, இப்போது பாலாவின் புது படத்தில் நடிக்க கூடும் என தெரிகிறது. விஷால், ஆர்யா இணையும் இப்படத்துக்கு இன்னொரு ஹீரோயின் சரத்தின் மகள் வரலட்சுமி என்பது உறுதியாகாத செய்தி.ராம்கோபால் வர்மா இயக்கும் "ரான்' படத்துக்காக நியூஸ் சேனல் ஒன்றை ஆரம்பித்து இருக்கிறார் அமிதாப். 24/7 என்ற பெயரிடப்பட்ட நியூஸ் சேனலின் அதிபராக வருகிறாராம் அமிதாப். இதில் "யாவரும் நலம்' நீது சந்திராதான் செய்தி வாசிப்பாளர். மனிதனின் மாறுபட்ட பரிணாமங்கள்தான் கதையாம்.ஜீ டி.வி.யின் தமிழ் பதிப்பு விரைவில் 24 மணி நேர நியூஸ் சேனல் ஆகிறது. வழக்கமான நியூஸ் சேனல் பாணியில் இல்லாமல் சினிமா மற்றும் சீரியல் சம்மந்தமான பொழுதுபோக்கு செய்திகளுக்கு முக்கியத்துவம் இருக்குமாம். வெளிநாட்டு செய்திகளும் வந்து போகுமாம். மியூசிக் சேனல் ஒன்றும் துவக்கம் பெறுகிறதாம்.ஜெயா சேனலின் "பளீச் பெண்கள்' நிகழ்ச்சிக்காக சுஹாசினியுடன் இணைந்திருக்கும் சர்மி, இதற்கு முன் எஸ்.எஸ். மியூசிக்கில் ரியாலிட்டி ஷோ நடத்தி வந்தவர். இதை தவிர எஸ்.ஏ.ராஜ்குமார், ஜோஸ்வா ஸ்ரீதர், செல்வகணேஷ் உள்ளிட்ட இசை குழுக்களின் ரீ ரெக்காடிங் பிரிவில் இருந்தவராம்."நிம்மதி', "நாணயம்', "சவாலே சமாளி' உள்ளிட்ட பல சீரியல்கள் மற்றும் டெலி பிலிம்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த மனிஷா, தற்போது "என்னை தொலைத்த நாள்கள்' என்ற படத்துக்காக நாயகியாகிறார்.வேலு பிரபாகரனின் உதவியாளர் ஜெய்குமார்தான் இயக்குநராம்."அயன்' படத்துக்குப் பின் "பருத்தி வீரன்' கார்த்திக்கை இயக்கப் போவதாக இருந்த கே.வீ.ஆனந்த், இப்போது திடீரென்று சிம்புதான் நாயகன் என அறிவித்து விட்டார். காதலை மையமாக வைத்து உருவாகும் இதில் தமன்னாதான் நாயகி என்பதும் மாறி, "அலைகள் ஒய்வதில்லை' ராதாவின் மகள் கார்த்திகா வேடம் கட்டப் போகிறாராம்.
Comments
Post a Comment