கோவாவுக்கு 'ஏ' சான்றிதழ்?



வெங்கட் பிரபு அண்ட் கோ, கோவா படத்தை காமெடிப் படமாக தந்திருக்கும் என்று பார்த்தால், காம நெடி வீசும் படமாக மாற்றியுள்ளதாம்.

படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், 'படம் பரவாயில்லை.. ஆனா செக்ஸ் மற்றும் டபுள் மீனிங் தூக்கலா இருக்கே... வேணும்னா ஏ சர்டிபிகேட் தரலாம்' என்று கூறி விட்டதாம்.

எப்படியாவது யு ஏ வாங்க முயற்சிக்கிறதாம் தயாரிப்பாளர் தரப்பு.

இதற்கிடையே படத்துக்கு நல்ல தியேட்டர்கள், தமிழகம் அளவிலான விநியோகஸ்தர்கள் கிடைக்கச் செய்திருக்கிறாராம் தயாரிப்பாளரின் சூப்பர் ஸ்டார் அப்பா.

சினேகா, பியா நடித்துள்ள இந்தப் படத்தில் இன்னொரு நாயகியும் உண்டாம். அதை சஸ்பென்ஸாக வைத்துள்ளனர். ரஜினிக்கே இனிமேல்தான் படத்தைக் காட்டப் போகிறார்களாம்.

தமிழகம் முழுக்க விற்பனையாகி விட்ட இந்தப் படம் 200க்கும் மேற்பட்ட பிரிண்டுகளுடன் ஜனவரி 29-ம் தேதி வெளியாகிறது.

Comments

Most Recent