தமிழ் சினிமாவின் பத்திரிகையாளர்களின் பன்முகப் பங்களிப்பை உறுதிப்படுத்தும் ஆண்டாக மலர்ந்துள்ளது 2010. இந்த ஆண்டின் முதல்நாள் நடந்த எம்ஜிஆர்-ச...
தமிழ் சினிமாவின் பத்திரிகையாளர்களின் பன்முகப் பங்களிப்பை உறுதிப்படுத்தும் ஆண்டாக மலர்ந்துள்ளது 2010.
இந்த ஆண்டின் முதல்நாள் நடந்த எம்ஜிஆர்-சிவாஜி பாப்புலர் விருது வழங்கும் விழாவில் 3 பத்திரிகையாளர்கள் விருது பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் வி4 எண்டர்டெயினர்ஸ் அமைப்பு தமிழின் சிறந்த கலைஞர்களைத் தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது.
2009-ம் ஆண்டின் விருது வழங்கும் விழா ஜனவரி 1-ம் தேதி சென்னை லேடி ஆண்டாள் பள்ளி அரங்கில் நடந்தது.
ராம நாராயணன், கலைஞர் டிவி அமிர்தம் உள்ளிட்ட திரையுலகின்முக்கிய பிரமுகர்கள் அத்தனை பேரும் பங்கேற்ற இந்த விழாவில் பல்வேறு பிரிவுகளில் ஜெயம் ரவி, பரத், சசிகுமார், அருண் விஜய், ஆர்.கே., பொன்வண்ணன், வடிவேலு, எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் பெற்றனர்.
சிறந்த நடிகைக்கான விருது லட்சுமிராய்க்கு வழங்கப்பட்டது. மேலும் நடிகைகள் பூர்ணா, தேஜாஸ்ரீ, ஸ்ரீதேவிகா, ஷம்மு, ரூபா, சங்கீதா ஆகியோருக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
இயக்குநர்கள் சசிகுமார், பிரியதர்ஷன், சேரன், வெங்கடேஷ், சமுத்திரக்கனி, ஜனநாதன், சுராஜ், இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், கவிஞர் வைரமுத்து, பாடகர்கள் மாலதி, கிரீஸ் ஆகியோரும் விருது பெற்றார்கள்.
இவர்களுடன் 3 பத்திரிகையாளர்களும் விருது பெற்றனர்.
இன்று முன்னணி பிஆர்ஓக்களில் ஒருவராகத் திகழும் ஏ ஜான் சிறந்த பத்திரிகைத் தொடர்பாளராகத் தேர்வு செய்யப்பட்டார். இவர் முன்பு சினிமா நிருபராக முன்னணி பத்திரிகைகளில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து விருது பெற்றவர் நெல்லை பாரதி. வண்ணத்திரை இதழின் பொறுப்பாசிரியர் இவர். பட்டாளம் படத்தில் சிறப்பான பாடல் எழுதியதற்காக சிறந்த பாடலாசிரியர் விருது பெற்றார்.
இன்னொருவர், தமிழ் சினிமாவின் டெர்ரர் வில்லன் என முதல் படத்திலேயே பாராட்டுப் பெற்ற தேவராஜ். தினகரன் நிருபர் இவர். யோகி படத்தில் அமீரின் தந்தையாக வந்து தாய்மார்களின் கோபத்தைச் சம்பாதிக்கும் அளவு திறமை காட்டியவர்.
அனைவருக்கும் அவருக்கு எம்ஜிஆர் பல்கலைக் கழக வேந்தர் ஏ சி சண்முகம் விருது வழங்கினார்.
விருது பெற்றோர், வி 4 அமைப்பின் டைமண்ட் பாபு, சிங்காரவேலு மற்றும் ரியாஸ் ஆகியோருக்கு தங்கள் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.
Comments
Post a Comment