அனன்யாவுடன் இணையும் தனுஷ்



நாடோடிகள் பட நாயகி அனன்யா, அடுத்து தனுஷுடன் இணைகிறார் - சீடன் படத்துக்காக.

குட்டி படத்தைக் கொடுத்து முடித்துள்ள தனுஷ் தற்போது அடுத்த படத்துக்குத் தயாராகி விட்டார். படத்தின் பெயர் சீடன். ஏற்கனவே தனுஷை வைத்து ஹிட் அடித்த சுப்ரமணியன் சிவா இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடி சேருகிறார் அனன்யா. நாடோடிகள் படத்தில், சசிக்குமாரின் மாமன் மகளாக வந்து, எப்போது பார்த்தாலும் நொறுக்குத் தீனி தின்றபடி, வாயாடியாக வந்து அசத்திய அதே அனன்யாதான் ஹீரோயின்.

படத்தில் சுஹாசினி, ஷீலா, பொன்வண்ணன், இளவரசு ஆகியோரும் உள்ளனர்.

படத்தில் இன்னொரு ஜோடியும் உண்டு. அந்த 2வது நாயகனைத் தேடும் படலம் நடந்து வருகிறதாம். அவருக்கு ஜோடியாக ஷீலா நடிப்பாராம்.

தீனா இசையமைக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாம். பிரசாத் ஸ்டுடியோவில் இப்டத்துக்காக பிரமாண்ட செட் போட்டுள்ளனராம்.

Comments

Most Recent