அமிதாப் புகழ்ந்து தள்ளிய அபிஷேக்-ரசிகர்கள் பெரும் எரிச்சல்

ட்விட்டர் மூலம் தனது தந்தை அமிதாப் பச்சனை ஆஹோ, ஓஹோவென அபிஷேக் பச்சன் புகழ்ந்து தள்ளப் போக, அதை எரிச்சலுடன் விமர்சித்துள்ளனர் அபிஷேக்கின் ரசிகர்கள்.

தனது ட்விட்டர் பக்கத்தில் அமிதாப் பச்சனின் ரன் படம் குறித்து வெகுவாகப் புகழ்ந்து பாராட்டி எழுதியிருந்தார் அபிஷேக் பச்சன். அதில், அமிதாப் பச்சன் போன்ற மாபெரும் திறமைசாலிகளுக்கு நாம் நிச்சயம் பொருத்தமானவர்கள் இல்லை. அவருடைய திறமைக்கேற்ற படங்களை நாம் தயாரிப்பதாகவும் தெரியவில்லை என்றும் பெரிய அளவில் அமிதாப்பச்சனை புகழ்ந்திருந்தார் அபிஷேக்.

ஆனால் அவரது எழுத்து, திரையுலகை மறைமுகமாக விமர்சிப்பது போலவும், அமிதாப் பச்சனை ரொம்ப ஓவராக புகழ்வதும் போல இருப்பதாக ரசிகர்கள் கிண்டலடிக்க ஆரம்பித்து விட்டனர்.

அபிஷேக்கின் பாராட்டு குறித்து ஒரு ரசிகர் கொடுத்துள்ள பதிலில், உங்களது சொந்தக் குடும்பத்தை நீங்களே பெரிய அளவில் பாராட்டுவது ரசிக்கும்படி இல்லை. அதிலும், பகிரங்கமான ஒரு மீடியாவில் இதுபோல நீங்கள் எழுதியிருப்பது நிச்சயம் சரியல்ல. உங்களது தந்தை குறித்து நீங்கள் புகழக் கூடாது. மற்றவர்கள்தான் அதைச் செய்ய வேண்டும் என்று விளாசியுள்ளார்.

இதையடுத்து அனைவரின் கருத்துக்களையும் நான் வரவேற்கிறேன் என்று கூறி சமாளித்துள்ளார் அபிஷேக்.

Comments

Most Recent