மோகன்லாலுடன் இணையும் சரத்குமார்!



தமிழில் ஜக்குபாய்க்குப் பிறகு சரத் குமாருக்கு வாய்ப்புகள் எதுவுமில்லாத நிலை. அவரே உருவாக்கிக் கொண்டால்தான் உண்டு.

ஆனால் மலையாளத்தில் அவருக்கு வாய்ப்புகள் தொடர்கின்றன. எல்லாம் பழஸிராஜா வெற்றியின் பலன்.

பழஸி ராஜாவில் மம்முட்டியுடன் இணைந்து நடித்தவருக்கு, இப்போது மோகன்லால் படம் ஒன்றில் நடிக்க அழைப்பு வந்துள்ளதாம்.

ஒரு முக்கியமான ஆக்ஷன் காட்சியில் மட்டும் சரத் நடிக்கிறாராம். அதற்கு மலையாளத்தில் உள்ள வழக்கமான நடிகர்களை போடுவதைவிட, சரத் போன்ற நடிகரை தோன்ற வைப்பது புதிதாக இருக்கும் என்பதால் இந்த வாய்ப்பைத் தந்துள்ளார்களாம்.

பெரிய நடிகர்கள் பலரையும் ஒன்றிணைத்து இயக்குவதில் ஸ்பெஷலிஸ்டான ஜோஷி இந்தப் புதிய படத்தை இயக்குகிறார்.

கிறிஸ்டியன் பிரதர்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், மோகன்லால், சுரேஷ் கோபி, மனோஜ் கே ஜெயன், காவ்யா மாதவன், பத்மப்ரியா, திலகன், இன்னொஸன்ட் என பெரும் நட்சத்திப் பட்டாளமே உள்ளது.

மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ஜோஷியின் 'ட்வெண்டி;20' படத்தின் பெரும்பாலான டெக்னீஷியன்கள் இந்தப் படத்திலும் தொடர்கிறார்கள்.

Comments

Most Recent