கும்பகோணத்தை குலுங்க வைத்த நயன்!



கும்பகோணம் என்ற சின்ன நகரத்தையே ஒரு குலுக்கு குலுக்கிவிட்டதாம் நயன்தாராவின் தளுக்கு...

ஆர்யாவுடன் முதல் முறையாக நயன் ஜோடி போடும் 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படப்பிடிப்பு நடந்து வருகிறது.

சிவா மனசுல சக்தி படத்தை இயக்கிய ராஜேஷ் இயக்கும் இந்தப் படத்தில் கும்பகோணத்தில் வசிக்கும் பெண்ணாக பாவாடை தாவணியில் நடிக்கிறாராம் நயன்தாரா.

ஒரு காட்சியில் கும்பகோணம் நகருக்குள் செல்லும் பஸ்ஸில் நயன்தாராவும் ஆர்யாவும் ஒருவரையொருவர் அழுத்தமாக உரசியபடி பயணிக்க வேண்டும்.

இந்தக் காட்சி படமாக்கப்பட்டதும், ஒட்டுமொத்த கும்பகோணமே திரண்டு வந்து மெயின்ரோட்டில் நின்று கொண்டு தாவணி பறக்க படியில் பயணம் செய்த நயன்தாராவை வாய் பிளந்து பார்த்ததாம்.

நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகமானதால் போக்குவரத்து ஸ்தம்பித்துப் போனதாம். வேறு வழியில்லாமல் படப்பிடிப்பை வேறு பகுதிக்கு மாற்றிக் கொண்டாராம் இயக்குநர் ராஜேஷ்.

இதுகுறித்து ராஜேஷ் கூறுகையில், 'இதுவரை நீங்கள் பார்க்காத நயன்தாராவை இந்தப் படத்தில் பார்ப்பீர்கள். ஆர்யாவுக்கும் நயனுக்கும் அத்தனை அற்புதமாக கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸெல்லாம் ஒர்க் அவுட் ஆகியுள்ளது' என்றார் சிரிக்காமல், சீரியஸாக!

Comments

Most Recent