கிசுகிசு..ஏன் என்றே தெரியவில்லை-விஜயலட்சுமி



எனக்கும் நடிகர் கிருஷ்ணாவுக்கும் ரகசிய திருமணம் நடந்து குழந்தை கூட பிறந்துவிட்டதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை என்று 'சென்னை 28' புகழ் விஜயலட்சுமி கூறினார்.

அவர் கூறுகையில், "எனக்கும், கிருஷ்ணாவுக்கும் காதல் என்று பேசப்படுவதில் உண்மை இல்லை. எனக்கும், கிருஷ்ணாவுக்கும் ரகசிய திருமணம் நடந்துவிட்டதாகவும், இரண்டு பேருக்கும் குழந்தை இருப்பதாகவும் இன்டர்நெட்டில் வதந்தியைப் பரப்பி விட்டார்கள்.

அது வெறும் வதந்திதான். கிருஷ்ணா எனக்கு நல்ல நண்பர். எங்களுக்கு இடையே ஆழமான நட்பு உள்ளது. அது மட்டுமே உண்மை.

எந்த கதாநாயகனுடன் நான் நடித்தாலும், அந்த கதாநாயகனை நான் காதலிப்பதாக கிசுகிசு பரவி விடுகிறது. அது ஏன் என்றே தெரியவில்லை. யார்ல இப்படிச் செய்கிறார்கள் என்றும் தெரியவில்லை.

நான் ரொம்ப கலகலப்பான டைப். எனக்கு நகைச்சுவையாக பேசும் அனைவரையும் பிடிக்கும். ஜாலியாக பேசிக் கொண்டு ஷாப்பிங் கூட்டிச் செல்பவர்களையும் ரொம்பப் பிடிக்கும். அதே போல நண்பர்களில் கூட மீசையுள்ளவர்கள்தான் ரொம்பப் பிடிக்கும்.. என்றார்.

Comments

Most Recent