தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதை எதிர்த்து ஹைதராபாத்தில் பிரமாண்டப் பேரணி நடத்தப்படும் என நடிகர் மோகன்பாபு கூறியுள்ளார். இதுகுறித்து மோகன்பாப...
தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதை எதிர்த்து ஹைதராபாத்தில் பிரமாண்டப் பேரணி நடத்தப்படும் என நடிகர் மோகன்பாபு கூறியுள்ளார்.
இதுகுறித்து மோகன்பாபு ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனிமாநிலம் அமைக்ககோரி கடந்த 1 மாதத்திற்கும் மேலாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இதனால் ஹைதராபாத்தில் சட்டம்- ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சினிமா துறையினரால் படப்பிடிப்பு கூட நடத்த முடியாத துரதிருஷ்ட நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையைப் போல ஹைதராபாத்தையும் பாதுகாப்பான நகரமாக மாற்ற வேண்டும்.
தெலுங்கானா தனி மாநிலம் அமைத்தால் ஹைதராபாத்தில் எந்த படப்பிடிப்பையும் நடத்த முடியாத நிலை உருவாகி விடும். இங்கு வசிக்கும் ஆந்திர மக்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை உருவாகி விடும்.
எனவே தெலுங்கானா தனி மாநிலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹைதராபாத்தில் விரைவில் பல லட்சம் பேர் பங்கேற்கும் பிரம்மாண்ட பேரணி நடத்தப்படும்.
இதில் ஹைதராபாத்தில் வசிக்கும் ஆந்திர மக்கள் பெருந்திரளாக கலந்து கொள்கிறார்கள். இந்த பேரணிக்கான அனுமதியை கவர்னரிடம் கேட்டுள்ளோம் என்றார்.
Comments
Post a Comment