மூட்டு வலி காரணமாக மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் மனோரமா. அங்கு அவருக்கு இரண்டாவது முறை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தமிழ் ப...
மூட்டு வலி காரணமாக மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் மனோரமா. அங்கு அவருக்கு இரண்டாவது முறை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தமிழ் பட உலகில் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டவர் ஆச்சி மனோரமா.
கடந்த சில மாதங்களாக முழங்கால் வலியினால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக கேரளா சென்று ஆயுர்வேத சிகிச்சை பெற்றார். இருப்பினும், அவருக்கு முழங்கால் வலி குணமாகவில்லை.
அதனால், மீண்டும் சென்னை திரும்பி இங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு அவருடைய வலது முழங்காலில் ஆபரேஷன் நடந்தது. அதன்பிறகு அவர் வீடு திரும்பி, வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார்.
ஆனால் மீண்டும் அவருடைய இடது முழங்காலிலும் வலி ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, மீண்டும் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று அவருக்கு 2-வது முறையாக அறுவைச் சிகிச்சை நடந்தது.
ஆபரேஷனுக்கு பின் மனோரமா நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும், அவர் இன்னும் 10 நாட்கள் மருத்துவமனையில் இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.
மனோரமாவை திரையுலகப் பிரபலங்கள் பலர் பார்த்து அவர் குணமடைய வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
Comments
Post a Comment