நயன்தாராவுக்கு இனி இடமில்லை- சிம்பு



நயன்தாராவுக்கு இனி என் மனதில் இடமில்லை. அது முடிந்துபோன விஷயம் என்கிறார் சிம்பு.

வாலிபன் என்ற படத்தை இயக்கி நடிக்க சிம்பு தயாராகி வருகிறார். இதற்கான கதையை உருவாக்கிவிட்டதாகவும், இந்த கதை சிம்பு- நயன்தாரா காதலையும், முறிவையும் அடிப்படையாக வைத்து எழுதி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுபற்றி சிம்புவிடம் கேட்டபோது, "வாலிபன் படத்தின் கதை ஒருதலையான காதல் கதை. ஒருதலை ராகம் மாதிரி இருக்கும். இந்த கதையில் வரும் பெண்ணுக்கு காதல் ஏற்படவே இல்லை.

அப்படி இருக்கும்போது நயன்தாரா கதை என்று எப்படி சொல்ல முடியும். அட அப்படியே இருந்தாலும் அதில் என் வரையிலான விஷயங்கள்தான் இருக்கும்.

இன்னொன்று நயன்தாராவும், நானும் காதலித்தோம். எல்லோருக்குமே அது தெரியும்.

அந்த காதல் முடிந்துவிட்டது. நயன்தாரா என் மனதில் இல்லை. இனி அவருக்கு என் வாழ்வில் இடமும் இல்லை. நான் மாறிவிட்டேன். என் வாழ்க்கை இப்போது வேறு மாதிரி.." என்றார்

Comments

Most Recent