வரலாற்று ஆர்வம்


வரலாற்றுக் கதைகளைப் படமாக்க தமிழ் இயக்குநர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கான திரைக்கதை அமைப்பு, உருவாக்கம் என எஸ்.பி.ஜனநாதன், விஷ்ணுவர்தன், சமுத்திரகனி ஆகியோர் பிஸியாக உள்ளனர்.


"பேராண்மை' படத்தின் வெற்றிக்குப் பின் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் சோழர்கால வரலாற்றை உருவாக்கி வருகிறார். கடல் வணிகம், கோயில்களின் உருவாக்கம் ஆகியவற்றின் பின்னணியில் காதல்தான் கதை கரு. அதே போல் தஞ்சை ராஜராஜசோழனின் வரலாற்றை படமாக்கும் முயற்சியில் இருக்கிறார் விஷ்ணுவர்தன். எழுத்தாளர் பாலகுமாரனின் கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது.


விக்ரம் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அது உறுதி செய்யப்படவில்லை.  "நாடோடிகள்' படத்தின் வெற்றிக்குப் பின் சரித்திர கால கதையை மையமாக வைத்து இயக்குநர் சமுத்திரகனியும் திரைக்கதையை உருவாக்கி வருகிறார். இது கமர்ஷியல் கதையாக உருவாக்கம் பெறுகிறது.

Comments

Most Recent