மூன்று படங்கள் மட்டும்தான் இந்தப் பொங்கலுக்கு என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், இன்னொரு படமும் ரேஸில் சேருகிறது. அது வசந்த பாலன் இயக்கத்தில்...
மூன்று படங்கள் மட்டும்தான் இந்தப் பொங்கலுக்கு என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், இன்னொரு படமும் ரேஸில் சேருகிறது.
அது வசந்த பாலன் இயக்கத்தில் உருவாகும் அங்காடித் தெரு.
ஐங்கரன் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படத்தில் வாலிபால் பிளேயரான மகேஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அஞ்சலி நாயகியாக நடித்துள்ளார்.
இயக்குநர் ஏ வெங்கடேஷ் இதில் நடிகராக அறிமுகமாக, ஸ்நேக ஒரு பவர்புல் ரோலில் தோன்றுகிறாராம். ஜெயமோகன் வசனம் எழுதியுள்ள இந்தப் படத்துக்கு இசை ஜிவி பிரகாஷ். இதுவரை ஒரு பாட்டும் ஹிட்டான வழியைக் காணோம்.
படம் முடிந்துவிட்டாலும், மிஷ்கினின் நந்தலாலாவை கிடப்பில் போட்ட மாதிரிதான், இந்தப் படத்தையும் மூலையில் போட்டு வைத்திருந்தார்கள ஐங்கரன் தயாரிப்பாளர்கள். காரணம் வரிசையாக அவர்களுக்கு விழுந்த அடி அப்படி.
இயக்குநர் வசந்தபாலனும் மேடைக்கு மேடை ஐங்கரன் தயாரிப்பாளர்களை புகழ்ந்து பார்த்தார்.. ஒன்றும் நடக்கவில்லை.
இடையில் பேராண்மை படம் ஓரளவு திருப்தியாக ஓட, புது தெம்படைந்த ஐங்கரன் 'அங்காடி'யைத் திறக்க முடிவு செய்து அறிவிப்பும் வெளியிட்டுள்ளனர்.
பொங்கலுக்கு 100 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. 'இது சைலண்டா ஜெயிக்கும்' என்கிறார் படத்தின் இயக்குநர் வசந்தபாலன்.
ஜெயிப்பது இருக்கட்டும்... தயாரிப்பாளர்களை 'சைலண்டாக்கிவிடாமல்' இருந்தால் சரிதான்!
Comments
Post a Comment