Entertainment
›
Cine News
›
அசத்தலாக ஐநூறு திரையரங்குகளில் அசத்த வருகிறது அஜீத்தின் 'அசல்'!
தமிழ்நாடு மற்றும் உலகமெங்கும் அசல் படம் 500 தியேட்டர்களில் திரையிட இருப்பதாக சிவாஜி ஃபிலிம்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அஜித்தின் முந்த...
தமிழ்நாடு மற்றும் உலகமெங்கும் அசல் படம் 500 தியேட்டர்களில் திரையிட இருப்பதாக சிவாஜி ஃபிலிம்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அஜித்தின் முந்தய படமான பில்லா 300 பிரிண்டுகள் போடப்பட்டு உலகம் முழுவதும் 300 தியேட்ட்ர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது.
ஆனால் இயக்குனர் சரண்ப் அஜித் காம்பினேஷன் ரசிகர்களுக்கு எப்போதுமே மிகப்பெரிய டிரீட்டாக அமைந்திருப்பதால் இந்தமுறை வழக்கத்துக்கு அதிகமாகவே எதிர்பார்ப்பு உயர்ந்துள்ளதாகச் சொல்கிறார்கள் சென்னை மண்டல டிஸ்ரிபியூட்டர்கள். இந்த எதிர்பார்ப்பை ஈடு செய்ய 500 பிரிண்டுகள் போடப்பட இருப்பதாக நம்பத்தகுந்த சிவாஜி ஃபிலிம்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அசல் படத்தின் படப்பிடிப்பை மலேசியா, சிங்கப்பூர், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் நடத்தி முடித்த இயக்குனர் சரண், க்ளைமாக்ஸ் தொடர்பான காட்சிகள் அனைத்தையும் சென்னையில் ஏவிஎம் ஸ்டூடியோவில் செட் அமைத்து படம்பிடித்தார். இறுதிக் காட்சி தவிர அஜீத், சமீரா தோன்றும் டூயட் பாடல் காட்சியும் ஏவி.எம்.ஸ்டியோவில் படமாக்கப்பட்டுள்ளது.
படத் தின் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் அஜீத் பேசும் வசனக் காட்சி, சென்னையில் உள்ள சிவாஜிகணேசன் வீட்டில் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது எஸ் எஃப் எக்ஸ் எனப்படும் சிறப்பு ஒலிகள் சேர்க்கும் பணி நடைபெற்று வருவதால் இதன்பிறகே பின்னனி இசை சேர்ப்பு பணிகள் தொடங்குகின்றன.
விஜயின் வேட்டைக்காரன் படம் ரசிகர்களை திருப்தி படுத்தாவிட்டாலும் வியாபார ரீதியிலான வெற்றியை எட்டியிருக்கிறது. இதனால் அஜித்தின் அசலும் மிகப்பெரிய வெற்றி பெரும் என்பது தமிழ்ரசிகர்கள், கொடம்பாக்கம் என அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தற்போதைய நிலவரப்படி பிப்ரவரி12-ஆம்தேதி அசல் ரிலீஸ் என்று அறிவித்துள்ளார் சரண். இதில் மாற்றம் இருக்குமா என்பதை பொங்கலுக்கு வெளியாகும் படங்களின் முடிவுகள் தீர்மாணித்து விடும். அதுவரை பொறுத்திருப்பதைத் தவிர தல ரசிகர்களுக்கு வேறு வழியில்லை.

Comments
Post a Comment