எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12ம் திகதி 2010 இல் வெளிவரவிருக்கும் தமிழ்த் திரைப்படமான விண்ணைத் தாண்டி வருவாயா ஒஸ்கார் மற்றும் கோல்டன் குளோப் வி...
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12ம் திகதி 2010 இல் வெளிவரவிருக்கும் தமிழ்த் திரைப்படமான விண்ணைத் தாண்டி வருவாயா ஒஸ்கார் மற்றும் கோல்டன் குளோப் விருதுகளை வென்ற பின்னர் ரஹ்மான் இசையமைத்திருக்கும் முதல் தமிழ்த் திரைப்படம் என்பதால் கோடம்பாக்கத்தில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் மத்தியிலும் பலத்த எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.
கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு மற்றும் திரிஷா நடித்து வரவிருக்கும் படம் இது. கவிஞர் தாமரை பாடல் வரிகளை எழுத அந்தோனி எடிட்டிங் செய்துள்ளார்.
இத்தாலியில் உள்ள மால்டா தீவுகள்,மற்றும் அமெரிக்காவில் உள்ள கண்கவர் இடங்களான பிக் அப்பிள்,நியூயோர்க் நகரம், பென்சில்வானியா,நியூ ஜேர்சி ஆகிய பிரதேசங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. காதலர் தினத்திற்கு சமீபமாக அழகான காதல் கதையுடன் வெளிவரவுள்ள இத்திரைப்படத்தில் 7 ரொமாண்டிக் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. 2009 டிசம்பர் 18ம் திகதி லண்டனில் நடைபெற்ற இப்படத்தின் பாடல்களின் மாதிரி வெளியீடு பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இதேவேளை இப்படத்தின் பாடல்கள் சோனிமியூசிக் மூலமாக ஜனவரி 7ம் திகதி உலகம் முழுதும் வெளியாகவுள்ளன.

Comments
Post a Comment