செம்மொழி மாநாட்டு பாடல்: கருணாநிதி-ரஹ்மான்-ஷங்கர் கூட்டணி!

உலக தமிழ் செம்மொழி மாநாட்டுக்காகவும், அதன் பிறகு அனைத்து தமிழ் மேடைகளிலும் ஒலிப்பதற்காகவும் ஒரு புதிய தமிழ் வாழ்த்துப் பாடலை உருவாக்குகிறது தமிழக அரசு.

இந்தப் பாடலுக்கு இசையமைப்பவர் நம்ம இசைப்புயல் ரஹ்மான்தான். பாடலை உருவாக்கும் பொறுப்பு பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாம்.

முன்னதாக இப்படியொரு யோசனையை தமிழக முதல்வருக்குச் சொன்னவர் சன் நெட்வொர்க் அதிபர் கலாநிதி மாறன்தானாம். இதனை உடனே ஒப்புக் கொண்ட முதல்வர், யாரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைக்கலாம் என யோசித்தபோது, மணிரத்னம் அல்லது ஷங்கர் என்று பதில் வந்ததாம்.

இசைக்கு இளையராஜா அல்லது ரஹ்மான் என்ற யோசனை சொல்லப்பட, கலாநிதி மாறன்தான் ஷங்கர்- ரஹ்மான் காம்பினேஷன்தான் பெஸ்ட் சாய்ஸ் என்று கூறி சம்மதிக்க வைத்தாராம்.

பல கோடி செலவில் உருவாகும் இந்தப் பாடலுக்கு கவிதை எழுதித் தருபவர் வேறு யாருமல்ல... முதல்வர் கருணாநிதிதான்!!.

Comments

Most Recent